நடராஜனுக்காக கிட்ணி திருடபட்டதா: சர்ச்சை வெடிப்பு

Image may contain: 3 people
படத்தில் சசிகலாவுடன் இருப்பது ஜே.தீபா, மாதவன் என்பவர் அப்பொழுது எங்காவது டீ கடையில் டீ ஆற்றிகொண்டிருந்திருக்கலாம்..

தற்போதைய “தியாக தலைவியும்”, முன்பு தியாகம் செய்ய வாய்ப்பு மறுக்கபட்டு தற்போது தியாகம் செய்ய வந்திருக்கும் “வருங்கால தியாக தலைவியும்” முன்பொரு காலத்தில் எடுத்தபடம்

அது ஒரு பெண் சிங்க காலம். சர்வாதிகார ஆட்டம் மகா உச்சத்தில் இருந்த காலம். அப்பொழுது எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றார்கள், எல்லா விழாக்களிலும் இவர்கள்தான் கும்பலாக ஆடியிருக்கின்றார்கள்

என்ன செய்ய? கூட்டங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் கலாச்சாரம் என்றுமட்டும் ஆகிவிட்டது.


நடராஜனுக்காக கிட்ணி திருடபட்டதா: சர்ச்சை வெடிப்பு

செத்தவனை கூட இந்த கும்பல் விடாது, போல அவர்களிடமும் ஏதோ சுருட்டிகொண்டுதான் விடும்.

பிணங்களும் இவர்களிடம் மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


 

 டிவி சேனல் மாற்றும்பொழுதும் சில சுவாரஸ்யங்கள் வருகின்றன‌

ஒரு சேனலில் நிலா சென்றுவிட்டு வெற்றிகரமாக பூமி திரும்பிய முதல் இந்தியரான சசிகலாவிற்கு வரவேற்பு நடக்கின்றது

அடுத்த சேனலில் நேயர் விருப்பமாக‌ ஒரு பாடல் ஓடிகொண்டிருக்கின்றது

“அட்றா அவள.. வெட்ரா அவள..கொல்றா அவள.. தேவையே இல்ல..”

அநேகமாக அந்த பாடலை மாற்றுகுரலில் விரும்பி கேட்டது பன்னீர் செல்வமாக இருக்கலாம்.