நடிகர் விஜய் முதலமைச்சர் பழனிச்சாமியினை சந்தித்தார் : செய்தி

நடிகர் விஜய் முதலமைச்சர் பழனிச்சாமியினை சந்தித்தார் : செய்தி

“மெர்சல்” என்றொரு படத்தில் நடித்துவிட்டு இந்த விஜய் கடும் “மெர்சலாகி” திரிகின்றார்

ஜெயாவோடு தனக்கு இருந்த சில தடங்கல்கள் நீங்கும் என நம்பியிருந்த கணக்கு தவறாகி மனிதர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்

உண்மையில் விஜய் போட்டது தப்புகணக்கு

ஜெயாவின் கனவினை நனவாக்கவே ஆள்கின்றோம் என சொல்லிகொண்டிருக்கும் பழனிச்சாமி கோஷ்டி , ஜெயா விஜயினை ஓட அடித்தே தீரவேண்டும் என்ற கனவினை மட்டும் நிறைவேற்றாமல் விட்டுவிடுமா?

இந்த விஷயத்தில் ஜெயா வழியில் தவறாமல் செல்கின்றது பழனிச்சாமி அரசு. நிச்சயம் ஜெயா ஆன்மா சந்தோஷமடையும்

விஜய் தன்னை வந்து பார்த்து கதறியதில், உண்மையிலே தான் ஜெயா நாற்காலியில் இருக்கும் முதல்வர்தான் என பழனிச்சாமிக்கும் நம்பிக்கை வந்து மனிதர் உற்சாகமாகியிருப்பார்.

விஜய் பதற்றத்தில் ஒரு தவறு இழைத்துவிட்டார், பழனிச்சாமியினை ஏன் சந்திக்க வேண்டும்? அக்கா தமிழிசையினை சந்தித்தால் மோடியிடம் சொல்லி உலகெல்லாம் மெர்சல் படத்தை திரையிட உதவியிருக்கமாட்டாரா?

மோடிக்கு தெரியாத நாடுகளா?

“மோடி உதவியுடன், தமிழிசை ஆசீர்வாதத்துடன் இந்த புரடக்க்ஷன் வழங்கும் விஜயின் மெர்சல்” என டைட்டில் போட்டால் உலகெல்லாம் மோடி, தமிழிசை புகழும் பரவி விடாதா?