நந்தினி சீரியலில் பேய் வேடத்தில் வருகின்றார் குஷ்பூ
நந்தினி எனும் சீரியலை சில நொடிநேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதில் பேய் வேடத்தில் வருகின்றார் குஷ்பூ
பார்த்தவுடன் இப்படித்தான் சிந்திக்க தோன்றியது, உலகின் அழகான பேய் பார்த்தாயிற்று, இப்படி ஒரு பேய் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இனி பேய்கள் எல்லாம் ரசிகர் மன்றம் தொடங்கிவிடுமே? என்ன செய்யலாம்?
அதனாலென்ன? பின்பு நாம் நரகம் சென்றாலும் (கண்டிப்பாய் அங்குதான் போல..) பிரச்சினை இல்லை, ரசிக பேய்கள் நமக்கு தனி மரியாதை கொடுத்து நன்றாக கவனித்துகொள்ளும்….
இதுவரை பேய்களில் மோகினிதான் அழகு என்பார்கள், நந்தினி சீரியல் வந்த பின் மோகினிபேய் இரண்டாம் இடத்திற்கு தள்ளபட்டுவிட்டது
அந்த சீரியல் பெயரை முதலில் “அழகிய பேயே” என மாற்ற சொல்ல வேண்டும்.