நம்ம ஊரு அரசியல்…

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற உத்தரவு வரலாம் : செய்தி

இந்த முதலமைச்சர், அமைச்சர் குடும்பங்களுக்கு இது பொருந்துமா? தமிழக அரசே அவர்கள்தான்.? ஆக அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகளும் அரசு பள்ளியில் படித்தாக வேண்டும்..

அப்படியே அதிமுகவினர் அக்கட்சி பிரமுகர்கள் நடத்தும் பள்ளியிலும், திமுகவினர் அந்த கட்சி பிரபலங்கள் நடத்தும் பள்ளியிலும்தான் படிக்க வேண்டும் என சட்டம் வாய்மொழியாக வரும்..

தமிழிசை, எச்.ராசாவின் குடும்ப குழந்தைகளுக்கு சிக்கல் இல்லை, காவி ஆசிரமத்தில் அவை யோகா, மந்திரம், சமஸ்கிருதம் என கற்றுகொள்ளும்

உணர்வாளர்கள் நிலைதான் சிக்கல், ஈழ‌ யாழ்பாணத்திற்கு அல்லவா அனுப்ப வேண்டும். அதுதான் பெரும் பிரச்சினை..


மக்களை ஏய்க்கும் மாய்மாலச் செயல்கள், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: வேல்முருகன்

தன்னை பற்றி இவ்வளவு தெளிவாக சொன்ன ஒரு அரசியல்வாதி தமிழகத்து வரலாற்றில் இவரை தவிர யாருமில்லை

வாழ்த்துக்கள் வேல்முருகன், இந்த தைரியம் எல்லோருக்கும் வராது.


சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்: ரசிகர்களை மீண்டும் சந்திக்க முடிவு

ரஜினியுடன் ஆர்வமாக செல்பியெடுக்கும் இளைஞர்களில் பலர் நாம் தமிழர் கட்சியினர் என்ற ரகசிய தகவல் அங்கிள் சைமனுக்கு கிடைத்திருக்கின்றதாம்

அதனால் இம்முறை பச்சை தொப்பி வைத்து, கருப்பு கண்ணாடி போட்டு, கன்னத்தில் மரு வைத்து அங்கிள் சைமன் மாறுவேடத்தில் சென்று கண்காணிக்க வாய்ப்பு இருக்கின்றது..


அதிமுகவில் நடக்கும் பிரச்சினை ஒன்றே ஒன்றுதான், அதாகபட்டது அமைச்சர்கள் எல்லாம் பழனிச்சாமி பக்கமும், அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் எல்லாம் தினகரன் பக்கமும் செல்கின்றார்கள்

122 அமைச்சர்களை வைத்திருந்தால் பழனிச்சாமிக்கு இந்த சிக்கல் வந்திருக்காது, நாளை தினகரன் முதல்வரானாலும் இதே 122 அமைச்சர்கள் எனும் சிக்கலை சந்திக்க நேரிடும்

அது சாத்தியமில்லை என்றால் என்னாகும்? விடுவார்களா எம்.எல்.ஏக்கள்? திவாக‌ரன், வெங்கடேசன், விவேக் என யார் பின்னாலாவது எங்களை அமைச்சராக்கினால் ஆதரவு என செல்லமாட்டார்களா என்ன?

அவர்களும் என்ன செய்வார்கள்? இனி ஒருமுறை எம்.எல்.ஏ ஆவது என்பது, வடகொரிய அதிபர் முன்னால் துப்பாக்கியால் மிரட்டிவிட்டு உயிரோடு திரும்புவதற்கு சமம் என்பது தெரியாதவர்களா?

மறுபிறவி எடுத்தாலும் இனி வாய்ப்பு கிடைக்காது என அறிந்தவர்கள், முடிந்த மட்டும் அள்ள அமைச்சராக முயற்சிக்காமலா இருப்பார்கள்??

எப்படியோ அனைவரையும் அமைச்சராகாமல் இனி அதிமுக அரசு அமையாது என்பது தெரிகின்றது

பல ஒருநாள் அமைச்சர்கள், சுழல்முறை அமைச்சர்கள் தமிழகத்திற்கு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை


எனக்கு அசைவ உணவுப் பழக்கமே உள்ளது: வெங்கைய்யா நாயுடு!

நாட்டுக்கு உங்கள் பணி என்ன, இதுவரை என்ன செய்திருக்கின்றீர்கள்? என கேட்டால், நான் என்ன உண்பேன் தெரியுமா? என சொல்லிகொண்டிருக்கின்றார்

அதிமுகவினரோடு பழகி, அவர்களை போலவே ஆகிவிட்டார் நாயுடு, எல்லாம் பழக்க தோஷம்