நம் குரலுக்கு செவிசாய்த்த அக்கா தமிழிசை வாழ்க,.

அட நேற்றுத்தான் எழுதினோம், கச்சதீவில் தமிழக உரிமையினை மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும், அமித்ஷா களமிறங்க வேண்டும் என எழுதியிருந்தோம்

இதோ அக்கா உடனே 2014லே சென்று சுஷ்மாவினை சந்தித்து தாங்கள் சில காரியங்களை சொன்னதை நினைவு கூர்ந்திருக்கின்றது

ஆக என்ன புரிகின்றது?

அக்கா அமித்ஷா மூலம் கச்சதீவில் தமிழக உரிமைகளை மீட்க போகின்றது, முதல் மீனை அங்கு அக்காவே பிடிக்க போகின்றது, அக்காவே அடுப்பு மூட்டி சமைக்கவும் போகின்றது

நம் குரலுக்கு செவிசாய்த்த அக்கா தமிழிசை வாழ்க,.

நம்மை வலுகவனமாக மிக அணுக்கமாக கண்காணிக்கும் அக்கா தமிழிசைக்கு கோடி நன்றிகள்

“தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலே
ஏழபட்ட சாதிக்கொரு ஈரம் இருக்கு

காயம்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போற வாழ்க்கையிலும் சாரம் இருக்கு..”