நயந்தாராவுடன் நடிக்க சரவணா ஸ்டோர்ஸின் சுந்தரனுக்கு ஆசை வந்துவிட்டதாம்

17951913_10208937060598876_1452954448245444367_n

நயந்தாராவுடன் நடிக்க சரவணா ஸ்டோர்ஸின் சுந்தரனுக்கு ஆசை வந்துவிட்டதாம்

காட்டாற்று வெள்ளத்தில் இறங்க தயங்குபவன் எல்லாம், வெள்ளம் வற்றி காய்ந்துபோகும் முன் ஆற்றில் இறங்குவது சகஜம்தான்..

உதயநிதி ஸ்டாலினுடனெல்லாம் நடித்துவிட்ட நயனுக்கு இவருடன் நடிக்க என்ன தயக்கம் இருக்க முடியும்?

எம்ஜி ராமசந்திரன், தனுஷ் எல்லாம் பார்த்த தமிழ் சினிமா, ராமராஜன், விஜயகாந்தின் மகனை எல்லாம் ஹீரோவாக பார்த்த தமிழகத்தில் இவரையும் ஹீரோவாக பார்க்கும் துரதிருஷ்ட தலைவிதி தமிழகத்திற்கு இருக்கமானால் யார் மாற்ற முடியும்?

விளாத்திகுளம் பக்கமிருந்து வந்து தன் தந்தை சம்பாதித்தது தன்னை நயனுக்கு ஜோடியாக்க என்ற உண்மை அவருக்கு இப்பொழுதுதான் விளங்கியிருக்கின்றது..

ஒரு காட்சிக்கு கோட் சூட்டுடன் ஆட இது பாடல் இல்லை, சினிமா, கொஞ்சம் அசந்தாலும் ஜட்டியோடு தி.நகரில் நிறுத்திவிடும்

ஆனால் இந்த சுந்தர சுடர்ழகனும் பரவாயில்லை, தனக்கு அந்த நல்லி எலும்பு நயந்தாராதான் பொருத்தமாக இருப்பார் என மிக பெருந்தன்மையாக மனம்விட்டு ஒப்புகொண்டிருக்கின்றார்

அவ்வகையில் அவரை பாராட்டலாம்

நண்பர்Babu Rao வுக்கு மிக சோதனையான காலம், மனிதர் தன் தலைவியின் மவுசு இவ்வளவுதானா? என மனம்பொங்கி கொண்டிருக்கின்றார்..

நண்பர் Chandran Kannan சிங்கப்பூர் மரங்களில் முட்டி முட்டி அழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்திய பாஸ்போர்ட்டினை திரும்ப ஒப்படைத்து தன் எதிர்ப்பினை தெரிவிக்க வாய்ப்பு இருக்கின்றதாம்.

நயனின் பவுசு அவ்வளவுதான், ஆனால் எங்கள் தலைவி குஷ்பூ அரசியலுக்கு வந்துவிட்டதால்தான் தீபிகா படுகோனேயும், பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் தலைகாட்ட முடிந்தது

எல்.கே.ஜி பாய்ஸ்.. இனியாவது திருந்துங்கள், மனதை தேற்றி கொள்ளுங்கள் விரைவில் காற்று வெளியிடை பாலாஜி கூட நயனுடன் ஜோடியாக நடித்தாலும் நடிக்கலாம்..

Babu Rao Chandran Kannan போன்றோரின் தூக்கத்தை கெடுத்துவிட்ட அந்த சரவணா ஸ்டோர் முதலாளி வாழ்க…..