நல்ல இலக்கியவாதி என்பவன்வரலாற்றில் நிற்பான்
நல்ல இலக்கியவாதி என்பவன்வரலாற்றில் நிற்பான், முதலாவது அவன் மனம் உண்மையிலே மானிட சமூகத்தை சிந்தித்ததாக இருத்தல் வேண்டும் அவர்கள் உண்மையினை தேடும்படி இழுப்பதாக இருத்தல் வேண்டும். அந்த ஆன்மாவின் அடி ஆழத்தின் உண்மையில் இருந்து அவன் எழுதவேண்டும், ஆன்மாவின் குரலாக பிரபஞ்ச சக்தியின் குரலாக அவன் எழுத்து அமைய வேண்டும்
அவ்வகை இலக்கியவாதிகளே வரலாற்றில் நிற்பர்
சும்மா மல்லாக்க படுத்துகொண்டு கவிதானுபவம், சுகானுபவம் , பிரக்ஞை , மடமை மண்ணாங்கடி என கனவுலகில் சஞ்சரித்து எழுதுபவனால் இப்பூமியில் குப்பை ஒன்று மிஞ்சுமே தவிர தரமான இலக்கியம் ஒரு நாளும் வராது
வள்ளுவன் கம்பன் முதல் ஜெயகாந்தன் பாலகுமாரன் வரை அவ்வகை
காலகாலத்துக்கும் நிலைபெற்ற கட்டங்களில் தஞ்சை கோவிலும் இன்னும் பல ஆலயங்களும் வருமே தவிர எந்த பணக்காரணின் மாளிகையும் வராது
காரணம் தெய்வசக்திக்கும் மானிட சக்திக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். எல்லோரும் இறைவனை அறியவேண்டும் என்ற பொதுநல நோக்கில் கட்டபட்ட ஆலயம் வரலாற்றில் நிற்கும்
மாறாக தான் மட்டும் என்குடும்பம் மட்டும் என அமைக்கபடும் எதுவும் சாகா வரம் பெறாது
ஆம் நல்ல எழுத்தாளனின் மனது உண்மையினை எழுதும், உண்மை என்பது தன் மனமறிய கடவுளை நம்ப சொல்லும், இன்னும் பல தத்துவங்களை பொதுநலத்துக்காக கொடுக்கும்
அந்த சக்தியினை கொண்டு எழுதும் அல்லது படைக்கபடும் இலக்கியமே சாகாவரம் பெறும், அணையா ஒளிபெறும்
மற்றவை எல்லாம் புஸ்வானங்கள், வெறும் மத்தாப்புக்கள்
காலம் கடந்தபின் அவை குப்பைக்கு போகுமே தவிர மேடைக்கு வாரா..
உலக வரலாறையும், மாபெரும் மறைபொருளையும், ஆழ்கடல் முத்துக்களையும் தமிழுக்கு அற்புதமாக கொண்டுவந்த பா.ராகவன் எந்நாளு தஞ்சை கோவிலாய் நிற்பார்
அவர் முன்னால் விமாலதித்த மாமல்லன் என்பவர் போயஸ்கார்டன் வீட்டுக்கு கூட ஒப்பாக மாட்டார்
இதற்கு மேலும் சொல்ல ஒன்றுமில்லை, அந்த மாமல்லன் தமிழ்நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஏதும் செய்ய நினைத்தால் எழுதுவதை உடனே நிறுத்தினால் போதும், அதை தவிர பெரும் சேவை இருக்க முடியாது