நல்ல வேலைக்காரனாக இருந்தார்

ஆம் சசிகலாவுடனான பிணக்கான காலங்களில் சோ ராமசாமி ஜெயாவின் மிடாஸின் இயக்குநராயிருந்தார்

நல்ல வேலைக்காரனாக இருந்தார், கொடுத்த பணியினை செய்தார் 1 பைசா அதில் திருடவில்லை, ஊழல் செய்யவில்லை

சசிகலா திரும்பி வந்தபின் அதை விட்டு கவுரவமாக வந்தார்

அவர் என்ன பெரியாரோடு இருந்து அவர் சொத்துக்களை ஒரு கும்பல் அமுக்கியது போல் அமுக்கினாரா?

இல்லை டிவி பிரிக்கின்றோம், உங்கள் முதலீடு 100 கோடிதான் வாங்கிகொண்டு ஓடுங்கள் என அக்குடும்பம் சண்டையிட்டதே அப்படி சண்டையிட்டாரா?

வேலைக்காரனாய் சென்றார், வேலைக்காரனாகவே வந்தார்

கொஞ்சம் கண் அசைந்தால் கோடிகளை நொடியில் சுருட்டும் ஆலை அது, ஒரு பைசா அதில் சோ பெற்றிருப்பார்?

இல்லை சத்தியமாக இல்லை, மிடாசிலிருந்து கட்டியிருந்த ஆடை தவிர ஒன்றுமில்லாமல்தான் வெளியேறினார்

கூட இருந்து சுருட்டுவதும், அப்படியே கட்சியினை சொத்துக்களை கைபற்றும் திருட்டு வேலையினை அவர் செய்யவில்லை

இவ்வளவுக்கும் இந்த சசிகலா குடும்பம் , இந்த அடிமைகள் உட்பட யாருக்கும் இல்லா தகுதி சோவுக்கு உண்டு, ஜெயா ஆரம்ப காலத்தில் அவர் வளர்ப்பு

ஜெயாவினை பாதுகாத்தது நாங்கள் என சசிகலா குடும்பம் கட்சிக்குள் வந்து நிற்கும்பொழுது, ஜெயாவினை உருவாக்கியவர் நாங்கள் என சோ குடும்பம் வரவா செய்கின்றது?

மேன் மக்கள் அப்படித்தான்

அவ்வகையில் அவரை குற்றம்சாட்ட யாருக்கும் தகுதி இல்லை