நாங்குநேரி இடைதேர்தல்
நாங்குநேரி இடைதேர்தல் தேதி அறிவிக்கபட்டபின் சுவாரஸ்யமாகின்றது, விக்கிரவாண்டி உட்பட இரு தொகுதிகளுக்கு அடுத்தமாதம் தேர்தல்
இதில் நான்குநேரியில் அமமுக நிற்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் தினகரன் விலகிவிட்டார், இதனால் வள்ளியூர் சந்தை பக்கம் perumal pandian என்பவனும் அவனின் கூட்டாளிகளும் கதறி கதறி அழுதுவிட்டு வள்ளியூர் தெப்பகுளம் பக்கம் மல்லாக்ககிடப்பதாக செய்திகள் சொல்கின்றன
சின்னம்மா வரட்டும் அப்புறம் இருக்கு என அவர்கள் அவர்களுக்கே ஆறுதலும் சொல்லிகொள்கின்றார்களாம்
அத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கபட்டால் நயினார் நாகேந்திரன் நிற்கலாம் என்றார்கள், அவர் தனி பாஜக எம்.எல்.ஏவாக செல்ல விரும்பமாட்டார், அவர் நிச்சயம் அப்பக்க்கம் வரபோவதில்லை வந்தாலும் வெற்றிவாய்ப்பு சொல்லும்படி இல்லை
அத்தொகுதி அதிமுக அல்லது காங்கிரசுக்கு சாதகமான தொகுதி எனினும் கடந்த எம்.எல்.ஏ வசந்தகுமார் நடுஆற்றில் தங்களை கைவிட்டு எம்பியாகிவிட்டது காங்கிரஸ் மேல் ஒரு அவபெயரை உண்டு செய்திருப்பது நிஜம்
நம்பி வாக்களித்த மக்களை அக்கட்சி அப்படி விட்டிருக்க கூடாது
அதிமுக போட்டியிட வந்தாயிற்று விரைவில் வேட்பாளர் அறிவிக்கபடலாம்
இப்பக்கம் திமுகவுக்கா இல்லை காங்கிரசுக்கா தொகுதி என்பதில் சிக்கல் நிலவுகின்றது, காங்கிரஸ் தொகுதி காங்கிரசுக்கே என்கின்றது காங்கிரஸ்
“ஏன் கொடுத்தால் ராஜினாமா செய்யவா?” என கலாய்க்கின்றது திமுக
“இந்த இரு தொகுதிகளில் ஜெயித்தாலும், ஏன் 200 தொகுதிகளில் ஜெயித்தாலும் திமுக பழனிச்சாமி ஆட்சியினை கவிழ்க்கவா செய்யும்? 237 தொகுதி கிடைக்காமல் கொல்லை புறம் வழியாக திமுக ஆட்சிக்குவராது என சொல்லவா?” என பதிலுக்கு கலாய்கின்றது காங்கிரஸ்
ஆம் இரு எம்.எல்.ஏ கிடைத்தாலும் அங்கு திமுக ஒன்றும் கிழிக்க போவதில்லை, பழனிச்சாமி அண்ணாவுக்கு பின் ஊழல் குற்றசாட்டு இல்லாமல் சுத்தமாக வெளிவரபோகின்றார்
காங்கிரஸ் நிச்சயம் கேட்டுபெறும் என்கின்றார்கள் ஆனால் பெற்றால் வேட்பாளர் யார் என்பதில் வேட்டி கிழியும்
திமுகவுக்கு கொடுத்தால் அங்கும் அப்பாவு, ஞானதிரவியம், பெல்,ஆவுடையப்பன் என பல கோஷ்டிகள் உண்டு அங்கும் சிக்கல்தான்
எது எப்படியானாலும் தீபாவளி செலவு மற்றும் நவராத்திரி செலவுகளுக்கு பஞ்சமில்லை என நான்குநேரி மக்கள் மிக உற்சாகமாய் கதவினை திறந்து திண்ணையில் அமர்ந்துவிட்டதாக சில செய்திகள்
ஆம் உற்சாகமாய் தீபாவளி கொண்டாட போவது அவர்களே
இந்த தேர்தல் எப்படி போனால் என்ன? ஆம் நம் தமிழிசை அக்கா பிரச்சாரம் செய்யாத முதல் தேர்தல் இது
அக்கா இல்லாமல் அவரின் பிராண்ட் வசனமான நாங்குனேரியில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வசனம் இல்லாமல் என்ன தேர்தல்?
நினைத்தாலே கண்ணீர் வருகின்றது, வி மிஸ் யூ அக்கா..