நாங்க ஆயுத அரசியலுக்குதாண்ணே சரி
நாம் தமிழர் தும்பிகளில் சில அடிக்கடி பேசுகின்றன, கட்சிக்கு அப்பாற்பட்ட நல் உறமை மேம்படுத்துகின்றார்களாம், அப்படி சில பேசவந்தன
ஏன் இந்த கட்சியில் இருக்கின்றாய் என்றால் அரைமணிநேரம் அழுகின்றன, அவை அழும்பொழுது விஷயம் தெரியவில்லை , அழுதுவிட்டு சொல்லும்பொழுது உண்மை தெரிகின்றது
“அண்ணே, எங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய்ய ஆசை, ஆனால் திமுகவில் கடைசிவரை போஸ்டர் ஒட்டவேண்டும், அதிமுக காசு இல்லாதவனை மதிக்காது
எங்களை போல வயதுகுறைந்தவர்களுக்கு ஒன்றுமில்லாதவருக்கு , கொஞ்சமும் அறிவே இல்லாதவருக்கு அண்ணன் கட்சிதான் அடைக்கலம், கட்சியில் சேர்ந்த நாளே மாவட்ட செயலாளர் வரை பதவி கிடைக்கும்ணே… அதுதாம்ணே”
சரி கடும் உழைப்பாளிகளான நீங்கள் ஏன் தேர்தலில் வெற்றிபெறவில்லை என கேட்டால், தும்பி கண்ணீரை துடைத்துவிட்டு சொன்னது.
இதுபற்றி அண்ணன் கிட்ட கேட்டோம்ணே , “அடேய் நம்ம அண்ணன் பிரபாகரன் ஈழத்துல துப்பாக்கி சண்டைதான் போட்டாரு , தேர்தல் எல்லாம் அவருக்கு தெரியாது
அவருக்கு மட்டும் தேர்தல் தெரிஞ்சிருந்தா எனக்கு அவ்வளவு டிரைனிங் கொடுத்திருப்பாரு நாமளும் ஜெயிச்சிருக்கலாம், ஆனால் அண்ணன் பாழாய் போன ஆயுதபயிற்சி கொடுத்திட்டாரேடா…
எல்லா கட்சியும் ஆயுதம் தூக்கிச்சின்னு வை, ஒரு பய நம்மகிட்ட நிக்க முடியாது. ஆனா முடியாதே தம்பி , இதுதானே இங்க உள்ள சிக்கல்”
ஆமாண்ணே, நாங்க ஆயுத அரசியலுக்குதாண்ணே சரி, அதுதான் தோத்துட்டே இருக்கோம்