நாடாளுமன்றம் முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி நாளை உண்ணாவிரதம்
நாடாளுமன்றம் முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி நாளை உண்ணாவிரதம்
அதாவது இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் ஒரு நொடி கூட அவை நடத்த முடியவில்லை
ஆந்திர சிக்கல், காவேரி சிக்கல் , வங்கி மோசடி , வன்கொடுமை சட்ட திருத்தம் என பல்வேறு சிக்கல்கள் இரு அவையினையும் முடக்கின
இதில் மனம் நொந்து போனது அரசு, இதனால் எதிர்கட்சிகளின் அட்டகாசத்தை கண்டித்து ஆளும் பாஜகவே உண்ணாவிரதம் இருக்க போகின்றதாம்
இவ்வளவிற்கும் அறுதிபெரும்பான்மையுள்ள கட்சி, பின் ஏன் அஞ்ச வேண்டும்?
தேசிய அளவில் வெற்றிமேல் வெற்றிபெரும் கட்சி இப்படி எதிர்கட்சிகளுக்கு அஞ்சி உண்ணாவிரதம் என கண்ணை கசக்கும் விசித்திரத்தை இந்தியா இப்பொழுதுதான் பார்க்கின்றது
அவசரநிலை பிரகடனம் செய்து இந்நாட்டை ஆளும் அளவிற்கு அவர்களிடம் அதிகாரமிருந்தும் அழுகின்றார்கள்
நிச்சயம் இதெல்லாம் பெரும் அவமானம், 53 இன்ஞ் மார்பு எல்லாம் எங்கே போயிற்றென்று தெரியவில்லை
இனி பாகிஸ்தான் படையெடுத்தாலும் எல்லையில் உண்ணாவிரதம் இருப்பார் நம் பிரதமர்.
காந்தியினை இவர்களுக்கு பிடிக்காது ஆனால் காந்தி வழி உண்ணாவிரதம் மட்டும் பிடிக்கும் போலும்
மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தால் ஒரு அழிச்சாட்டியம் பிடித்த பிரதமர் எனும் தகுதி மோடிக்கு வந்தாயிற்று
எதிர்கட்சிகளின் எந்த உண்ணாவிரதத்தையும் இவர் கண்டுகொள்ளாதபொழுது, இவரின் உண்ணாவிரதத்தை மட்டும் மற்றவர்கள் கண்டுகொள்வார்களா?