நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு
நாடு முழுக்க ஒரே ரேஷன் கார்டு இதன்மூலம் மாநில எல்லைகளை தாண்டி எந்த இந்தியனும் இந்தியாவில் எந்த நியாயவிலை கடையிலும் பொருள் வாங்கலாம் என்கின்றது மத்திய அரசு
ஒரு ஆதார், ஒரு பாஸ்போர்ட், ஒரு லைசன்ஸ் போல ஒரே ஒரு அட்டை
இதில் பலத்த சர்ச்சை வருகின்றது , குறை சொல்லவேண்டும் என முடிவெடுத்தவர்கள் அதற்கான காரணத்தை தேடி பிடிக்காமலா இருப்பார்கள்
முதலாவது அவர்கள் சொல்லும் விஷயம் இதற்கு ஆண்லைன் வேண்டும் இன்னும் பல வசதிகள் வேண்டும் வட இந்தியாவில் இப்போது இருக்கும் பொதுவிநியோகமே சரியாக இல்லா பொழுது அடுத்தமாநில மக்களுக்கு எப்படி கொடுப்பார்கள்
இரண்டாவது நிதி சிக்கலை இது அதிகரிக்கும் ஏற்கனவே மானியகுறைப்பில் உளுந்து போன்ற சில பொருட்கள் நிறுத்தபட்ட நிலையில் மாநில அரசுக்கு கூடுதல் செலவுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்களையும் மாநில அரசு எப்படி ஏற்கமுடியும்
மூன்றாவது இதெல்லாம் வடநாட்டவரை தென்னாட்டில் குடியேற்ற்றும் முயற்சி இப்படி எல்லாம் சலுகை காட்டினால் தமிழகத்தில் நிரந்தரமாக குடியேற்றுவார்கள் முதலில் இந்தி திணித்தார்கள் இப்பொழுது இந்திகாரர்களையே திணிக்கின்றார்கள்
இதற்கான விளக்கத்தை இப்படி சொல்லலாம்
இது இந்தியா, பாஜக அரசுக்கு காஷ்மிரி முதல் கன்னியாகுமரிகாரன் வரை இந்தியனே அதில் ஒருகாலமும் பேதமில்லை
வடமாநிலங்களின் அமைப்பும் குறிப்பாக வடகிழக்கு போன்றவற்றின் அமைப்பும் உட்கட்டுமானமும் சில அசவுரியங்களை கொடுக்கலாம்
ஆனால் எல்லா வசதிகளும் கொடுக்கபட்டிருக்கின்றன, மின்சாரமும் போனும் எல்லா இடங்களுக்கும் கிடைத்திருக்கின்றன , அங்கெல்லாம் அரசு அலுவலகம் எல்லாம் இயங்கவில்லையா
அப்படி இந்த விநியோக திட்டமும் நல்லமுறையில் செயல்படுத்தபட அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் வெளிமாநிலம் உள்மாநிலம் என்ற பாரபட்சம் இருக்காது, அம்மாநில மக்களுக்கு வழங்கபடும் எல்லாமும் அங்கு வசிக்கும் பிறமாநில மக்களுக்கும் வழங்கபடும்
இந்தியாவில் பட்டினி சாவு என இல்லை, எல்லோருகும் எல்லாமும் கிடைக்கின்றது
கடந்தவாரம் ரஷ்ய கிராமம் ஒன்றில் வறுமையுற்ற தாய் உணவில்லாமல் குழந்தையினை கொன்ற செய்தி உலகை உலுக்கியது, இந்திய அரசு அப்படி அல்ல உணவு விநியோகத்தில் வலுகவனமாக இருக்கின்றது
உணவில் அவர்களுக்கு கோதுமையும் இவர்களுக்கு அரிசியும் தேவை இருப்பதால் போதுமான பொருள் கையிருப்பில் வைத்து வழங்கபடும்
இரண்டாவது இந்த நிதிசிக்கல் என்பது வெற்று கோஷம், மத்திய அரசு அடிப்படை மானியத்தை கொடுத்து கொண்டுதான் இருக்கின்றது மாநில அரசுகள் பல்வேறு இலவச விளம்பரங்களிலும் இன்னும் சிலவற்றிலும் இலவச அரசியல் செய்யலாம்,
அதெல்லாம் மாநில அரசு, தமிழகத்தில் ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கவில்லை
எனினும் இங்கு வசிக்கும் வெளிமாநில மக்களை இந்தியராக காக்கும் கடப்பாடு அரசுக்கு உண்டு, மாநிய சுயாட்சி என்பது அடுத்த மாநிலத்துகாரனை விரட்டுவது அல்ல
மூன்றாவது இது இந்திக்காரனை திணிக்கும் முயற்சி அல்ல, மும்பை, பெங்களூர் டெல்லி என இந்தியா முழுக்க தமிழர்கள் இருக்கின்றார்கள் பணி தொழில் என பரந்து கிடக்கின்றார்கள்
மும்பையில் மட்டும் எத்தனை லட்சம் தமிழர் வசிக்கின்றார்கள்? அவர்களுக்கு மகராஷ்டிர அரசு சலுகை மறுக்கின்றதா டெல்லி மறுக்கின்றதா?
இவர்கள் மட்டும் இப்படி இந்திக்காரன் திணிப்பு என்றால் எப்படி? இதெல்லாம் விதண்டா வாதம்
இதே தமிழகத்தில் அந்நிய நாடான இலங்கையில் இருந்து எவ்வளவோ அகதிகள் பல வருடங்களாக வசிக்கின்றார்கள், அவர்கள் வசிக்கும்பொழுது சக இந்தியன் வசிக்க கூடாதா?
இவர்கள் செய்வது எல்லாம் பிரிவினைவாதம், தமிழன் இந்தியா எங்கும் வசிக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் எவனுமே வசிக்க கூடாது என்பதெல்லாம் குறுகிய அரசியல்
நாங்கள் அப்படி பார்க்கவில்லை இந்நாட்டின் ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவின் எந்த மூலையிலும் எல்லா வசதியும் பெற்று வாழ முயற்சி எடுக்கின்றோம் இது எப்படி தவறாகும்?
தமிழக அரசை போலவே எல்லா மாநில அரசுக்கும் செலவு உண்டு அதை மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும்
ஏதோ எல்லா வட இந்தியரையும் இங்கு குவிப்பது போலவும் அதை தமிழக அரசின் தலையில் கட்டுவது போலவும் குதிப்பது என்ன நியாயம்?
எமக்கு ஒரு விஷயம் ஆச்சரியமானது, ஆள்வது பழனிச்சாமி அரசு அவர்கள் இதை ஏற்றுகொண்டார்கள் அதாவது இது சாத்தியம் என்பது அவர்களுக்கு தெரிகின்றது
அவர்களே சும்மா இருக்கும் பொழுது ஆட்சியிலே இல்லா இவர்கள் ஏன் குதிக்கின்றார்கள்?
இவர்கள் 1967ல் காமராஜருக்கு எதிராக 3படி அரிசிஎன அரசியலை தொடங்கினார்கள், பல இடங்களில் அரிசி அரசியல் செய்தார்கள்
அந்த அரிசி அரசியலை இன்றும் தொடர்கின்றார்கள்
மோடி ஆட்சிக்குவந்தால் ரேஷன் கடை ரத்தாகும் என இவர்களும் இவர்களின் பினாமிகளும் ஒப்பாரி வைத்தார்கள் அப்படியா நடந்தது இல்லை
இப்பொழுது எல்லாம் வடநாட்டான் தின்னபோகின்றான் எனமறுபடியும் தொடங்கிவிட்டார்கள்
ஸ்மார்ட் கார்டு கொண்டுவந்து எப்படி பதுக்கலை கட்டுபடுத்தபட்டதோ அப்படி இந்த திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தும் வழக்கம் போல அரசை எதிர்க்க இவர்கள் இதைவிடுத்து வேறு காரணம் தேடி ஓடுவார்கள் இது நடக்கும்