நாட்டில் ஜிஎஸ்டி முதல், தமிழக டெங்கு வரை பிரச்சினை ஆட்டிபடைக்கின்றது
உருட்டுக்கட்டையால் தாக்கிய பன்னீர்செல்வம் ஆதரவாளர்! – நிலைகுலைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ
ராமசந்திரன் காலத்தில் இருந்தே அடிதடியில் அடக்கபட்டதுதான் அக்கட்சி, அவருக்கு பின்னரான காலத்தில் கூட ஜெயா எதிர்ப்பாளர்களான சாத்தூர் ராமசந்திரன் முதல் சந்திரலேகா என ஆசிட் ஊற்றபட்டது, சசிகலா புஷ்பா சாத்தபட்டது வரை எல்லாம் வரலாறு
இதில் பன்னீர் கோஷ்டியும், தினகரன் கோஷ்டியும் போட்டு தாக்குதல் நடத்துவதில் என்ன ஆச்சரியம்?
ஒரு பயலும் தப்பகூடாது, ம்ம் “அதிமுக சண்டை மைதானம் திறக்கபடட்டும்..”
நாட்டில் ஜிஎஸ்டி முதல், தமிழக டெங்கு வரை பிரச்சினை ஆட்டிபடைக்கின்றது
எவ்வளவோ சிக்கல்களும் பிரச்சினைகளும் அலசபடவேண்டிய பத்திரிகைகளில் இந்த ஆஸ்கர் விருதினை நொடியில் தவறவிட்டவரும், பாரத ரத்னா விருதுக்கு காத்திருப்பவருமாமான தாடி பாலாஜி என்பவர் பற்றிய செய்தியும் வருகின்றது.
இந்த சமூகத்திற்கு எவ்வளவு உயர்ந்த கருத்துக்களை சொன்னவரும், நாட்டிற்கு மிக உழைத்த அந்த தாடிபாலாஜி செய்தியினை அரைபக்கத்தில் விடும் பத்திரிகைகளை முழு பக்க செய்தியாக்காமல் விட்டதற்கும்
அந்த மாபெரும் தியாகியின் செய்தியினை பத்தில் ஒரு செய்தியாக சொல்லி ஒரே செய்தியாக சொல்லாத ஊடகங்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
டெங்கு கொசு இம்சையில் இந்த கொசு இம்சையும் வேறு