நாட்டுபற்றை வளர்க்க திமுக என்ன செய்தது?

நாட்டுக்கு திமுக என்ன செய்தது என்றால், அது சமூக நீதி காத்தது என சொல்லி சீறுகின்றார்கள்

சர்ச்சையான ஆர்,எஸ்.எஸ் கூட சீனப்போரிலும், வங்கபோரிலும் எல்லையில் சென்று ஏதோ செய்தது, முடிந்த‌ சேவையினை செய்தது

ஆனால் திமுக போன்ற கட்சிகள் என்ன செய்தது என்றால், அதே பதில்தான் இது சமூக நீதிகாத்த இயக்கம்

பெரியார் என்ன அடுத்த நாட்டு நீதியினையா காத்தார்? அவர் அரசியலுக்கா வந்தார்? அரசியலுக்கு வராமல் சமூக நீதியினை காக்க முடியாதா என்றால் நீ சங்கி என பட்டம் கட்டிவிட்டு ஓடிவிடுகின்றார்கள்

நாட்டுபற்றை வளர்க்க திமுக என்ன செய்தது? ஒன்றுமில்லை என்பதை தவிர என்ன சொல்ல முடியும்?

இதற்கு மேல் கேட்டால் நாட்டுபற்றை நாங்கள் ஏன் வளர்க்க வேண்டும்? இது திராவிட இயக்கம் என்கின்றார்கள்,

சரி திராவிட பற்றையாவது வளர்த்து தனி நாடாவது கேட்டீர்களா என்றால் சத்தமே இருக்காது


பெர்முடா முக்கோண மர்மத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் : செய்தி

முடிந்தால் அவர்களை அப்பல்லோ மர்மத்தை கண்டுபிடிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், முடியுமா?