நாணத்தால் தேசம் தலைகுனிகின்றது

ஆயிரம் அரசியல் இருக்கட்டும் ஆனால் ராஜிவின் மரணத்தை இங்கு கொஞ்சமும் கொச்சைபடுத்த முடியாது

நிச்சயம் இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டி இந்நாடு பாதுகாப்பாக இருக்கவே அவர் விழைந்தார், ஒரு படுபயங்கர தீவிரவாத இயக்கம் நிச்சயம் இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் என மிக அணுக்கமாக கணித்திருந்தார்

இந்தியாவுக்கு ராஜிவ் காட்டிய வழிபெரிது

இன்றைய கணிணி இந்தியாவினை அன்றே கனவு கண்டவர் அவர், அதுதான் டிஜிட்டல் இந்தியா என இவர்களால் சொல்லபடுகின்றது

ஈழவிவகாரத்தில் வாஜ்பாய் என்ன மோடி கூட ராஜிவின் வழியே..

இந்தியாவில் எல்லோராலும் அறியபட்ட பெரும் தலைவர் என்பதாலும், யாசர் அராபத்தின் பெரும் பலம் என்பதாலும் வளைகுடா போரில் சதாமுக்கு ஆதரவாக நின்று அமெரிக்க விமானம் இங்கு வந்ததை கண்டித்தவர் என்ற காரணத்தாலும் கொல்லபட்டவர்

அதுவும் சிங்களனிடம் தப்பி, புலிகளின் நயவஞ்சகத்தில் கொல்லபட்டவர்

இந்த காந்தி, இந்திரா, ராஜிவ் என மூவரின் கொலைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

காந்தியினை கொன்றவனும் அவரை வணங்கியே சுட்டான், இந்திராவினை சுட்டவனும் வணங்கிவிட்டே சுட்டான்

அப்படி அந்த கொடிய தனுவும் ராஜிவினை வணங்கி மாலையிட்டே வெடித்தாள்

அரசியல் கொலைகளில் பெரும் கொடூர படுகொலை அது, ராஜிவ் சிதைத்தொழிக்கபட்டது போல இன்னொரு தலைவன் உடல் கிழிக்கபட்டதே இல்லை

சுருக்கமாக சொன்னால் ஒரே ஒரு ஷூவினை மட்டும் வைத்து அந்த உடலை வளித்துகொண்டு சென்றார்கள்

ஆம் அள்ள கூட ஏதுமில்லை, வளித்தார்கள்

“வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் – பாங்கு அழியாப் புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல்இட்ட கலம்..”

வரிப்புலிக்கு கஷ்டம் தீர்க்கும் ஒருவன் உடனே அதற்கு இரையாவது போல மூடருக்கு செய்யும் உதவி ஒருவன் உயிரை பறிக்கும் என்கின்றார் அவ்வையார்

அந்த கொடூர புலிகளுக்கு சில காரியங்களை செய்ய போய் நாட்டுக்காக சிதறினார் ராஜிவ்

ராஜிவ் சாவே தமிழகத்தில் திமுக + புலி கும்பல் பயங்கரவாதத்தில் இருந்து பிரித்தது

ராஜிவின் கொடூர மரணமே இங்கு பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தியது

அந்த மிக கொடிய கொலையினை, கொடூரத்தை ராஜிவின் தியாகத்தை இப்படி ஒரு பிரதமர் கொச்சைபடுத்துவது அழகல்ல‌

அரசியலுக்கு ஆயிரம் வழிகள் உண்டு, அதற்காக ஒரு தலைவனின் கொடிய சாவினை கேவலமாக பேசும் பொறுப்பற்ற செயலை அதுவும் ஒரு பிரதமர் பேசுவதை கண்டிக்காமல் இருக்க முடியாது

ராஜிவ் தான் கொல்லபடபோவதை உணர்ந்தே இருந்தார், ஆனால் கொஞ்சமும் அஞ்சவில்லை

இந்நாட்டுக்கு உண்மையாக உழைக்கும் பட்சத்தில் சாவது பெருமை என கருதினார், அந்த உறுதியிலேதான் வலம் வந்தார், கொடிய சாவினை தைரியமாக எதிர்கொண்டார்

ஆனால் பத்திரிகையாளரை கூட பாதுகாப்பு என சந்திக்கும் அஞ்சும் மோடி, குண்டுதுளைக்கா மேடையில் மிக பாதுகாப்பாக கண்ணீர்விடும் மோடி, சுருக்கமாக சொன்னால் தன் பாதுகாப்பில் கடும் அக்கறைகாட்டும் மோடி அந்த பெருமகனை பழிக்க கொஞ்சமும் தகுதி அற்றவர், அருகதை அற்றவர்

சிங்களன் தன்னை கொல்லமுயன்றதை கொஞ்சமும் அரசியலாக்காமல் அதை வெறுப்பு அரசியலாக்காமல் கடந்து சென்றவர் ராஜிவ் அவரின் பெருந்தன்மை அப்படி

அது பிறப்பாலும் நல்ல குடும்பத்து மேன்மையான வளர்ப்பாலும் வந்தது

ஏன் பிரபாகரன் தன்னை சந்தித்தபொழுது கூட தனக்கிருந்த குண்டு துளைக்காத சட்டையினை அவனுக்கு கொடுத்தவர்

கொல்லபடும் சில நாட்களுக்கு முன்பாக அந்த சண்டாளன் கிட்டுவினை தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து வாசல் வரை நடந்துவந்து வழியனுப்பிய பெருமகன் அவர்

ராஜிவினை பழிக்க மோடிக்கோ அந்த கொடூர மதவெறி கும்பலுக்கோ துளியும் அருகதையில்லை

அப்படி என்ன ஒரு வெறுப்பு?

ராஜிவ் ஏன் குடும்பமாக சாகவில்லை? தனியே ஏன் செத்தார் என்ற வெறுப்பினை தவிர ஏதும் இருக்க முடியாது..

மோடியின் இந்த வெறுப்பு பேச்சு தரம் தாழ்ந்த, அறம் அற்ற ஏன் மானிட தன்மையே இல்லாத ஒரு வெறுப்பான பேச்சு

இப்படிபட்ட மனிதர் பிரதமராய் இருப்பதை எண்ணி நாணத்தால் தேசம் தலைகுனிகின்றது