நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏஜெண்ட்-ஆ?
நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏஜெண்ட் என்றும், அவர்கள் எனக்கு பணம் கொடுத்து எழுதசொல்வதாகவும் சில தகவல்கள் பரவிகொண்டிருப்பதாக சொல்கின்றார்கள்
ஆனால் எவ்வளவு சம்பளம்? எந்த வங்கியாக வருகின்றது, போனஸ் எல்லாம் உண்டா என்பது பற்றி அவர்கள் சொல்லவில்லை
நாடு என சில விஷயங்களை சொன்னால் ஒருவன் ஆர்.எஸ்.எஸ் ஆகிவிடுவான், அதன் ஆதரவு ஆகிவிடுவானா?
எப்படி எல்லாம் கதை கட்டுகின்றார்கள்?
ஒருவன் நான் உன்னை கவனிக்கின்றேன் நீ திமுக என்கின்றான், இன்னொருவன் நீ உளவுதுறையினை சேர்ந்தவன் என்கின்றான்
இன்னொருவனுக்கு நான் ராஜபக்சே சொல்ல சொல்ல எழுதும் ஆளாக தெரிகின்றேனாம்.
ஆளாளுக்கு ஆயிரம் அனுமானங்களை உருவாக்கி அவர்களாக சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
எல்லா விஷயங்களிலும் நல்லதும் உண்டு , சர்ச்சகுரிய பக்கமும் உண்டு
அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இருக்கின்றது என்றால் திராவிட அமைப்புகளுக்கும் இருக்கின்றது
அந்த இரு பக்கங்களையும்தான் சொல்லிகொண்டிருக்கின்றோம்
இந்த திராவிடம் என பேசுபவர்கள் எல்லாம் ஒன்றை மறக்கின்றார்கள், ஒன்று எல்லா நாட்டிலும் இருப்பது போல சில சிக்கல்கள் இங்கும் இருக்கலாம், அதை கடந்து அமைதியாக வாழவேண்டும் இல்லை தனிநாடு கோரவேண்டும்
தனிநாடு என யாராவது கேட்கின்றான என்றால் இல்லை, ஆனால் அரசியல் தங்கள் கைகளை விட்டு போக கூடாது என்பதில் கவனமாக குழப்புகின்றார்கள்
இது புரியாவிட்டால் கிளம்புங்கள், அல்லது எவ்வளவு சம்பளம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தருகின்றார்கள் என ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள், ஜிஎஸ்டியினை கட்ட வேண்டும்
அதுவே இப்பொழுதுதான் டவுசரிலிருந்து முழு கால்சட்டைக்கு மாறியிருக்கின்றார்கள், மேலே இன்னும் வெள்ளை பனியந்தான்,
சட்டை வாங்க கூட வழியில்லா இயக்கமா எனக்கு சம்பளம் தரும்?
கலைஞரை பற்றி எழுதினால் அவர் சம்பளம் கொடுப்பாரா? சீமானை விமர்சித்தால் காங்கிரஸ் சம்பளம் கொடுக்குமா?
என்னவெல்லாமோ புலம்புகின்றார்கள்.
இதனை எல்லாம் நன்கு கவனிக்கின்றார்கள், ஆனால் யாராவது குஷ்பூவிடம் சென்று சங்கத்தை பற்றி சொல்கின்றார்களா என்றால் இல்லை
அதனை செய்யுங்கள், சங்கம் உங்களை வாழ்த்தும்.
கொசுறு
என்ன இழவு இந்த லட்சுமி படம்?
இது பெண்ணிய படம் என்றால் சன்னி லியோனும் மியா கலிபாவும் நடித்த படங்கள் எல்லாம் சர்வதேச அளவில் பெண்ணியம் பேசும் படங்கள் என விருது கொடுத்து கொண்டாடப்பட வேண்டும்