நாமல் ராஜபக்சே கடுமையாக எச்சரித்துள்ளார்

இலங்கையில் ராஜபக்சே குடும்பம் பதவிக்கு வந்ததை கண்டு மனதுக்குள் துள்ளி எழுந்த‌ தமிழக ஈழ வியாபார கும்பல் , அய்யயோ இனி ஈழதமிழருக்கு என்ன பாதுகாப்பு? என ஒப்பாரி வைத்ததை ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே கடுமையாக எச்சரித்துள்ளார்

இந்த முதலைகண்ணீர் கோஷ்டி இதுவரை ஈழமக்களுக்கு செய்த நன்மை என்ன? அவர்கள் எங்கள் நாட்டு குடிமக்கள், அவர்களை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் , தமிழக கோஷ்டிகள் அவர்கள் நாட்டு பிரச்சினைகளை பார்ப்பது நல்லது என எச்சரித்திருக்கின்றார்

நாமல் ராஜபக்சே எப்படியும் இன்னும் 15 ஆண்டுகளில் இலங்கை அதிபராக போகின்றவர் என்பதால் அவரின் எச்சரிக்கை கவனம் பெறுகின்றது

அவர் சொன்னதும் உண்மைதான், தமிழக அழிச்சாட்டிய கோஷ்டிகளால் இங்கு வெற்று அரசியல் செய்யமுடியுமே தவிர ஈழமக்களுக்கு ஒரு நன்மையும் அவர்களால் கொண்டுவரமுடியாது என்பதுதான் யதார்த்தம்

அதை மிக தெளிவாக சொல்லியிருக்கின்றார் நாமல்

பழைய திமுக போன்றவையாக‌ இருந்தால் “நாமல் நாட் நார்மல்” என ரைமிங்காக களமிறங்குவார்கள், அவர்களின் காமெடி போராட்டம் அப்படி

இப்பொழுதுள்ள கோஷ்டிகள் எல்லாம் மகா சீரியசனாவை என்பதால் இம்மாதிரி வசனங்களை எல்லாம் காணமுடியாது