நாமும் அப்படி ஒத்துழைப்பதுதான் சரி

இந்திய பொருளாதாரம் சரிவதாக பல செய்திகள் இன்னும் பல ஆருடங்கள் எல்லாம் கிளம்புகின்றன‌

உண்மையில் இது பாஜக அரசின் செயலா என்றால் இல்லை, கடந்த 5 ஆண்டாக இல்லாத சுணக்கம் இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது?

விஷயம் உலக அரங்கையும் இந்திய வரலாறையும் கவனித்தால் தெரியும்

சுதந்திரம் வாங்கும் பொழுது இது தரித்திர தேசம் அப்படித்தான் விட்டுசென்றான் வெள்ளையன்

நேரு போராடி வளர்த்தார் சந்தேகமில்லை, நல்ல அஸ்திவாரமிட்டார்

சிக்கல் இந்திரா காலத்தில் வந்தது, அவருக்கு பலத்த நெருக்கடி கொடுத்து இந்திய பணமதிப்பினை குறைக்க வைத்தது அமெரிக்கா, காமராஜர் தடுத்தும் இந்திரா குறைத்தார்

டாலருக்கு நிகராக இந்தியபணம் சரிய ஆரம்பித்தது அப்பொழுதுதான்

ஆயினும் சோவியத் என்றொரு எதிர்முகாம் இருந்தது, ஒரு சமநிலை நிலவியது

ராஜிவ் காலம் வரை அது தொடர்ந்தது, கவனித்தால் புரியும் இன்று இருக்கும் பணபுழக்கம் 1990 வரை இல்லை

இந்த அந்நிய பணம் வெள்ளமென பாய ஆரம்பித்தது மன்மோகன்சிஙின் சட்டதிருத்தத்துக்கு பின்பு, தாராளமயமாக்கல் காட் ஒப்பந்தம் என அவர்தான் கதவினை திறந்தார்

சோவியத் இல்லாதது, எதிரி என யாருமில்லா அமெரிக்கா மதம்கொண்ட யானையாய் திமிறியது. அதை அடக்குவார் யாருமிலர்

வளைகுடா யுத்தம் முதல் ஏராளமான நாட்டு பொருளாதாரம் வரை அது புகுந்து ஆடியது

2001க்கு பின் அமெரிக்காவில் தடுமாற்றம் வந்தது அது 2006ல் எதிரொலித்தது, 2008களில் இருந்து அவர்கள் கவனம் மாறியது

இப்பக்கம் புட்டீன் ரஷ்யாவினை பலமாக்க, சீனாவும் எழும்ப அவர்கள் கொஞ்சம் ஆடிபோனார்கள்

ஏற்கனவே தொழில்கள் அனைத்தும் தென்கொரியா, ஜப்பான், தைவான், ஜெர்மன் என திசைமாறி போக அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தது

என்னதான் சதாமினை தூக்கிலிட்ட்டு ஈராக்கை வளைத்தாலும் எண்ணெய் வருமானம் ஒன்றே நிலமையினை சரியாக்கவில்லை

பெரும் செலவு பிடிக்கும் அமெரிக்க பட்ஜெட்டுக்கு அதெல்லாம் தாளவில்லை , இன்னும் அவர்கள் செய்த தகிடுதிதோம் வேலைகள் குறிப்பாக சிரியா வழி எண்ணெய் வியாபாரம் , ஈரானியஎண்ணெய் கொள்ளை எல்லாம் ரஷ்யா தடுத்து அனுப்பிவிட்டது

அமெரிக்காவில் அதிருப்தி நிலவிய நிலையில்தான் டிரம்ப் வந்தார்

வந்தவர் மிக சரியாக உலோகங்களை குறிவைத்து வரி என அடித்தார்

தொழிற்சாலை எந்திரம், கார், பைக் முதல் உலோகமில்லா இடம் எது?

உலகின் மிகபெரும் பொருளாதரமாக வளர்ந்த சீனா அதில் பாதிக்கபட்டது, இன்னும் பல விவகாரங்களை அமெரிக்காவுக்கு திருப்பினார் டிரம்ப்

அதாவது ஒரு காலத்தில் ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா என பல நாடுகளுக்கு அள்ளி கொடுத்த அமெரிக்க உதவிகளை குறைத்தார், ஏன் பாகிஸ்தானுக்கே வெட்டு விழுந்தது

ஒரு பணக்காரன் ஊரெல்லாம் வாழவைத்துகொண்டிருந்தான் திடீரென என் வீட்டுக்கே ஒன்றுமில்லை என அதை எல்லாம் நிறுத்தினால் என்னாகும்?

கூடவே இனி இதற்கெல்லாம் கூடுதல் வரி என்றால் என்னாகும்?

அதுதான் உலகில் நடந்தது, சீனாவும் விடுவதாக இல்லை

இருபெரும் முதலாளிகள் மார்க்கெட்டில் சண்டையிடும் பொழுது மற்ற கடைகளும் பாதிக்கும்

அந்த பாதிப்பு வந்திருக்கின்றது, இதில் இந்திய அரசின் சில இறுக்கங்களையும் சொல்ல வேண்டும்

மன்மோகன் காலத்து தாறுமாறான பணவரவினை இவர்கள் அடைத்திருக்கின்றார்கள், தேசம் 1990க்கான காலங்களுக்கு திரும்புகின்றது

அதவாது ஒற்றை இரும்பு தலமை இந்தியாவில் அமரும் பொழுது என்னென்ன சிக்கலை சந்திக்குமோ அதை எல்லாம் சந்திக்கின்றது

20 ஆண்டுகளாக வளர்ச்சி எனும் பெயரில் வீங்கியிருந்தது இந்தியபொருளாதாரம், அது நல்லதல்ல

வீக்கம் இப்பொழுது குறைகின்றது, வேறொன்றுமில்லை

உலக நிலவரங்கள் மாறும்பொழுது இங்கும் நிலமை மாறும், உலகமே பாதிக்கபடும் பொழுது நாம் மட்டும் தப்பிவிட முடியாது

சீனாவின் வளர்ச்சி சரிந்து கிடக்கின்றது, அமெரிக்கா ஏதோ பரவாயில்லை என ஓடுகின்றது. ஐரோப்பிய நாடுகளிலும் நிலமை சொல்லிகொள்ளும் அளவில்லை

உலோக வர்த்தக போர் நடக்கும் சூழலில் ஆட்டோமொபைலுக்கான தொழில் பாதிக்கும் ஆனால் விரைவில் சரியாகும்

மாறாக அய்யய்யோ போச்சே என அழுபவன் அரசியலுக்காக மட்டுமே அழுவான்

தேசம் சவாலான விஷயங்களை கடக்கும் பொழுது துணை நிற்க வேண்டியது நம் கடமை

1965 யுத்தம் அது, பஞ்சாபிய எல்லையில் கோதுமை வயலில் புகுந்து பதுங்கினர் பாகிஸ்தானிய வீரர்கள்

விளைந்து கிடக்கும் வயல் பெற்றெடுத்த குழந்தைக்கு சமம் என்றும் பாராமல் கொளுத்திவிட்டனர் பஞ்சாபிய விவசாயிகள்

ஆம் நாட்டுக்காக மொத்தத்தையும் இழந்து துணை நின்றனர்

அந்த அளவு வேண்டாம், நாமெல்லாம் ஓரளவு தாங்கி நின்றாலே நாடு எல்லா சிக்கலையும் கடந்து செல்லும்

இப்போதைய தேவை உழைப்பும், சிக்கனமும், அரசுக்கு முழு ஒத்துழைப்புமாகும்

சீன மக்கள் அதை செய்கின்றார்கள், ஜப்பானியர்கள் செய்கின்றார்கள், பிரிட்டானியரும், ஜெர்மானியரும் செய்கின்றார்கள்

அட பாகிஸ்தானியரே அதைத்தான் செய்கின்றார்கள், அவர்கள் ராணுவம் கூட அமைதியாய் ஒத்துழைக்கின்றது

ஆம் சிக்கல் மிகுந்த காலத்தை தங்களின் ஒத்துழைப்பால் தேசம் கடந்துசெல்ல தாங்கி நிற்கின்றார்கள்

நாமும் அப்படி ஒத்துழைப்பதுதான் சரி, அது கடமையும் கூட.