நாமேதான் நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்

சென்னை தியாராய நகரில் இக்கொடுமை நிகழ்திருக்கின்றது அதை பற்றி பேசவோ போராடவோ இங்கு யாரும் இல்லை என்பது தன சோகம்

ஆம் டியூஷன் செண்டர் நடத்தியிருக்கின்றாள் படதாதரி பெண் ஒருத்தி, அவள் அன்றாகத்தான் நடத்தி இருக்கின்றாள் , சிக்கல் அவள் காதலன் உருவில் வந்திருக்கின்றது

பதின்ம வயது மாணவியரை ஆபாச படம் எடுத்ததும் மிரட்டி பணம் பறித்தும் பாலியல் கொடுமை செய்தும் அவன் ஆட்டம் போட்டிருக்கின்றான்

அந்த டீச்சர் பெண்ணும் காதலனுக்காக எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் இருத்திருக்கின்றாள்.

அதாவது கூடி கொடுத்து கொட்டியும் கொடுத்திருக்கின்றாள் அல்லது அவளின் ஆபாச படம் அவனிடம் இருத்திருக்கலாம்

ஆக அந்த மாணவியர் பெரும் சிக்கலில் இருந்திருக்கின்ற்றனர் பின் விஷயம் வெளியாகி இப்போஸுது பூதாகரமாக வெடித்துவிட்டது

தமிழகம் இப்பொழுது வள்ளுவர் மற்றும் இதர போராட்டத்தில் இருப்பதால் இதை கண்டு கொள்வர் யாருமில்லை

பொள்ளாச்சி கொடுமையினை விட மிக மிக கொடூரமான கொடுமை இது

நக்கீரன் பத்திரிகைக்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது இனி அவர்கள் பொங்கல் போனஸ் அதிகமமாக கொடுப்பார்கள் என்பதல்ல விஷயம்

அம்மாணவிகள் எப்படி அலறி இருப்பார்கள்? எவ்வளவு மனா உளைசலுக்கு ஆளாகியிருப்பார்கள் இதில் எப்படி படித்திருப்பார்கள்

எவ்வளவு பரிதாபம்

ஆக தனியார் டியூஷன் சென்டர்களை கிடுக்கிப்பிடி போட்டு கண்காணிக்க வேண்டிய நேரம் இது

நீட் மோசடி முதல் பாலியல் கொடுமை வரை டியூஷன் சென்டர்களில் நடப்பது கண்கூடாக தெரிவதால் பெற்றோரும்
மாணவியரும் ஆசிரியரும் மிக மிக கவனமாக இருப்பது நல்லது

விசாரணை நடக்கின்றது என்கின்றார்கள், இந்த சென்டர் அரசியல் வாதி, மதவாதி, பிரபல சாதி என ஏதாவது ஒரு பின்புலம் இல்லை என்றால் எப்படி விஷயம் வெளி வரும்?

நாமேதான் நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்