நாமே தொடங்கி வைக்கலாம்

யாரும் அதை சொல்லவில்லை அதனால் நாமே தொடங்கி வைக்கலாம்

காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் ஒரு சலசலப்புமில்லை காஷ்மீரிய அரசியல் இம்சைகளை தவிர யாரும் பொங்கியதாக தெரியவில்லை

லடாக் பிரதேசம் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டது

ஆனால் இந்தியாவிலே திமுக எனும் கட்சி மட்டும் துள்ளிதுள்ளி குதிக்கின்றது

அது குதிக்கும் முன்னால் பிரிட்டனின் தூதர் முக ஸ்டாலினை சந்தித்தார் என்பதுதான் இப்பொழுது கருத்தில் கொள்ள வேண்டியது

ஏற்கனவே அடுத்த நாட்டு சிக்கலான ஈழசிக்கலை இங்கு பற்றி எரிய செய்ததில் சென்னை அமெரிக்க தூதரகத்தின் பெயர் உண்டு

அது எங்கெல்லாமோ நீண்டு பத்மநாபா படுகொலை, ராஜிவ் கொலைவரை செல்லும்

இன்னும் பல காரியங்களில் அக்கரம் உண்டு உண்டு

திமுகவுக்கும் அமெரிக்காவுக்குமான தொடர்புகள் அண்ணா காலத்திலே பிரசித்தி பெற்றவை

இப்பொழுது பிரிட்டன் தூதர் ஸ்டாலினை சந்தித்தபின்பு திமுக காஷ்மீர்விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் என கிளம்புகின்றது

கூட்டி கழித்து பாருங்கள் விடை கிடைக்கும்

சமூக நீதி, இட ஒதுக்கீடு அது இது என அவர்கள் அந்த களை கூத்தாடிவித்தை எவ்வளவும் செய்யட்டும்

ஆனால் அதனை தாண்டி மகா முக்கிய பாதுகாப்பு விஷயங்களை தேச ஒற்றுமையில் விளையாட வந்தால் விட்டுகொண்டிருப்பது சரியல்ல