நாம் அழுத்தமாக சொல்கின்றோம்

நாம் அழுத்தமாக சொல்கின்றோம்

இது இந்துக்களின் நாடு, காலம் காலமாக அவர்கள் பெரும்பான்மையாக தொன்றுதொட்டு வாழும் ஒரே நாடு, உலகில் இந்து அடையாளங்களும் அதன் அபூர்வமான தத்துவ கோட்பாடுகளும் நிலைத்துவாழும் ஒரே நாடு

அந்த ஜெருசலேமினையும் யூத ஆலயத்தையும் எடுத்துவிட்டால் அதில் என்ன இருக்கின்றது? அது வெறும் பூமி என சொல்லும் யூதரை போல, இந்து மதம் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் இந்தியாவில் என்ன உண்டு?

இந்நாட்டின் மாபெரும் அடையாளம் அம்மதமும் அதன் பாரம்பரியமும், அது நிச்சயம் காக்கபட வேண்டும்

அதில் சந்தேகமில்லை, அந்த இந்து மக்களும் இந்துமா கடல் போல் பெரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை

அவர்களின் மிகபெரும் அமைதியான சுபாவத்தாலும், இந்நாட்டின் அமைதி அவர்கள் கையில் இருப்பதை அறிந்து தேசநலன் காப்பதில் அமைதியாய் இருப்பதாலுமே இத்தேசம் அமைதியாய் இயங்குகின்றது

இந்துமதம் போலவே மிக மிக பரந்த பெருந்தன்மையான மனம் கொண்டவர்கள அவர்கள்

அவர்கள் மதமும் மிக மிக அமைதியான, சுதந்திரமான , யாரையும் காயபடுத்தா மதம்

ஆனால் அதிலும் மிக குறுகிய மனமுள்ளோர் இருக்கின்றார்கள், மிக மூர்க்கமான ஐ.எஸ் இயக்கத்தைவிட கொடியவர்களும் இருக்கின்றார்கள்

அவர்கள்தான் இல்லா பொய்களை வெறுப்புகளை மற்ற மதம் மேல் திணிக்கின்றார்கள்

கற்பழிப்பினை இஸ்லாமும் கிறிஸ்தவமுமே உலகிற்கு சொன்னது என அவர்கள் சொல்லபோக நாமும் சிலவற்றை எழுதினோம்

அது காமத்தை வாழ்வின் ஒரு அங்கமாக இந்துமதம் சொன்னதை, மிக புனிதமாக சொன்னதைத்தான் நாமும் சொன்னோம்

கோவிலில் எரிந்தால் அது தீபம், சுடுகாட்டில் எரிந்தால் அது வேறு

இங்கு பொள்ள்ளாச்சியில் பிடிபட்டிருப்பதும் சுடுகாட்டு தீ வெறியர்கள்

அவர்களை பழிப்பதாக நினைத்து இஸ்லாமும் கிறிஸ்தவனுமே இத்தேசத்தில் கற்பழிப்பினை கொண்டுவந்தான் என்றால் எங்கணம் நியாயம்?

அதைத்தான் சாடினோம், மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் பெண்களை அவமானபடுதியோர் எப்படி அழிந்தார்கள் என சொல்லத்தான் விழைந்தோம்

வாலி எனும் மாவீரனே பெண்ணை தொட்டதால் அழிந்தான்

அதாவது கற்பழிப்பு விஷயங்கள் எல்லா மதத்திலும் இனத்திலும் உண்டு, அதன் கொடூர விளைவுகளையும் அவை சொல்ல தவறவில்லை

இதைத்தான் சொன்னோமே தவிர ராமனையும் கண்ணணையும் இந்துமதத்தையும் இழிவுபடுத்தி எதையும் சொல்லவில்லை

சொல்ல போவதுமில்லை

எம்மைபற்றி தெரிந்தவர்களுக்கு சொல்ல ஒன்றுமில்லை, எம் இந்துமத அபிமானம் அவர்கள் அறிந்தது

அறியோதோர் பலர் திட்டிகொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்