நாம் என்றுமே தேசியவாதி
நாம் நயினார் நாகேந்திரனுக்காக எழுதுகின்றோம் என சொல்லும் அற்ப மானிட திமுக மற்றும் பிரிவினைவாத கைகூலிகளுக்கு சொல்லிகொள்வது இதுதான்
நாம் என்றுமே தேசியவாதி, ஒரு காலமும் குறுகிய மாநில சிந்தனையில் நாம் இருந்ததில்லை. எக்காலமும் தேசிய நிலைப்பாடே
முன்பு கூட புலிகளுக்கு கருணாநிதி செய்த உதவியினை சொன்னோமே தவிர, திமுககாரனாக இருந்ததே இல்லை
இப்பொழுதும் நாம் பாஜக அல்ல, காரணம் இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் தவறு செய்யும்பொழுது இவர்களையும் நாம் கண்டிப்போம். நல்ல இந்தியன் என்பவன் அப்படித்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம்
நயினார் நாகேந்திரன் மாநில அரசியல்வாதியாக தொடங்கி அதில் அமைச்சராகி இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் தேசியவாதியாகியிருக்கின்றார்
ஆக அவர்தான் தேசிய வழிக்கு வந்தாரே தவிர, நாம் அவர் வழிக்கு செல்லவில்லை
நாம் அவரை தேசிய அரசியலுக்கு இழுத்துவரவுமில்லை, அப்படி அவரை நாம் இழுத்து வரவும் முடியாது.
எல்லோரையும் உங்களை போல 200 ரூபாய்க்கு எழுதுபவன் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது