நாம் தமிழர் தும்பிகளை நடுகாட்டு பக்கம் காணவே இல்லை

இந்த நாம் தமிழர் தும்பிகளை நடுகாட்டு பக்கம் காணவே இல்லை, எமக்கு கிடைத்த தகவல்படி அவர்கள் மண்வெட்டி தமிழன் ஆயுதமான கடப்பாரை ,நீளமான மூங்கில் குழாய் (முன்னால் கண்ணி வைத்து இந்த ஓணான் பிடிப்பது போல) சகிதம் கிளம்பியிருக்கின்றார்கள்

ஆனால் அங்கு குவிந்திருந்த பராகசுர எந்திரங்களை பார்த்துவிட்டு புலிகளிடம் கூட இப்படி எந்திரம் இருப்பதாக சைமன் சொல்லவில்லையே என ஆச்சரியபட்டு அந்த ராட்சத எந்திரங்களை சுற்றி சுற்றி பார்த்துவிட்டு “ஆத்தாடி.. எம்மாம் பெருசு.. இது யாரு செஞ்சது?” என அருகில் சென்று பார்த்தால் அவை ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் நாட்டு எந்திரங்களாய் இருந்தன‌

உடனே தும்பிகள் மண்டையில் மின்னல் வெட்டி கண்களில் நீர் கொட்டியது “ஆக இவ்வளவு நாளும் அந்த நாடுகள் எல்லாம் ஆடுமாடு மேய்த்துத்தான் பணக்கார நாடுகளாயின என அண்ணன் சொன்னதெல்லாம் பொய்யா..

இப்படிபட்ட எந்திரங்களெல்லாம் செய்கின்றார்களா? நாளை தமிழ்நாடு அடைந்தாலும் நாமும் ஆடுமாடு மேய்ப்பதை விட்டு இப்படி எல்லாம் செய்யவேண்டுமா? பின் ஏன் அண்ணன் குழப்பினார்” என முணுமுணுத்தபடியே வந்துவிட்டன‌

எனினும் ஒரு சில தும்பிகள் அண்ணன் இப்பொழுது ஷஷ்டி விரதத்தில் இருப்பதால் அது முடிந்தபின்பு ஆழ்குழாய் கிணற்றில் தமிழ் குழந்தைகளை போட்டு மீட்பது எப்படி என பயிற்சியளிப்பார் என நம்பிகொண்டிருக்கின்றன