நாம் தமிழர் ரஜினியை விமர்சிப்பது ஏன்?

அண்ணே ரஜினி சினிமாக்காரர் அதனால்தான் நாங்கள் கடுமையாக விமர்சிக்கின்றோம் என்கின்றார்கள் நாம் தமிழர்

உங்கள் தலைவன் சீமான் என்ன தொழில் செய்தான் என கேட்டால் ஓடிவிடுகின்றார்கள், பின் திரும்பி வந்து அவர் தமிழருக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா எங்க கூட வரவேண்டியதானே? ஏன் தனிகட்சி என சொல்லிவிட்டு சிரிக்கின்றார்கள்

சினிமாக்காரன் நாட்டை அழித்துவிடுவான் என்கின்றனர் திமுக, அதனை தொடங்கி வைத்ததே திமுகதானே என கேட்டால் நல்ல தலைவனுக்கு கீழ் பிரபல நடிகன் இருப்பது ஒன்றும் தவறில்லை என்கின்றார்கள

ஜெயலலிதா இருக்கும்பொழுது வராத ரஜினி, இப்பொழுது வந்தாலும் எங்கள் கட்சிக்குத்தானே வரவேண்டும், என பேசுவது அதிமுக ஸ்டைல். ராமசந்திரன் இடம் ரஜினிக்கு என்றால் அதிமுகவிற்கு அவர் வருவதுதான் சரி என்கின்றது அக்கோஷ்டி

நன்றாக கவனித்துபார்த்தால் ரஜினி தங்களோடு சேரவில்லை என்ற கோபத்தில்தான் எல்லாம் கத்திகொண்டிருக்கின்றதே தவிர வேறு ஏதும் அல்ல‌

அவர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்தால் மறுநிமிடமே தமிழ்பிள்ளை ஆகிவிடுவார், தினகரன் பக்கம் சேர்ந்தால் மறுநிமிடம் புரட்சியாளர் ஆகிவிடுவார்

திமுக பக்கம் வந்தால் இன்னொரு அண்ணா ஆனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை

இப்படிபட்ட முடிவுகளை எடுக்காததால் அவரை விரட்டிகொண்டே இருப்பார்கள், “எங்களோடு வந்துவிடு” என்பதற்கு அரசியல் மொழி “அவர் ஆபத்தானவர்” என சொல்லிகொண்டே இருப்பது