நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம்
நாட்டுக்கும் நாட்டு நலனுக்குமான விஷயங்களை முன்னிறுத்தி சொல்வதால் நாம் பாஜக என்றாலோ சங்கி என்றாலோ அப்படியே இருந்துவிட்டு போகின்றோம்
ஆனால் இன்று காமராஜரும் லால்பகதூர் சாஸ்திரியும் இருந்தால் இந்நேரம் பாஜகவில் இணைந்திருப்பார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் இருந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
ஏன் இந்திரா இருந்திருந்தாலே இன்று பாஜகவினை ஆதரிப்பார்.
நாமும் அவ்வழியே நாட்டுக்கு தேவையான விஷயத்தை மட்டும் சொல்கின்றோம்
காமராஜரையே திட்டி விரட்டி ஆட்சியினை விட்டு ஓட அடித்த கூட்டம் எம்மை விமர்சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்
ஆக நீவீர் எம்மை சங்கி என சொல்ல சொல்ல நாம் மிக சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை நினைத்து மகிழ்பெருமை கொள்கின்றோம்.