நாம் பாஜக கட்சி அல்ல, அல்லவே அல்ல‌

ஒன்றை அழுத்தமாக சொல்லிகொள்கின்றோம், நாம் பாஜக கட்சி அல்ல, அல்லவே அல்ல‌

மத எதிரியும் விரோதியும் அல்ல‌

அப்படி நம்பிகொண்டு இப்பக்கம் இருப்பவர்கள் உடனே விலகி செல்லவும்

அதுவும் அப்புறம் ஜி.. நம்ம கட்சி என இழுப்பவர்கள் உடனே விரட்டபடுவார்கள்

இருந்தாலும் அந்த அன்பர்களுக்கு ஒன்றை சொல்லிவிடலாம்

தமிழகம் பஞசாப் போன்ற தனித்த அடையாளம் உள்ள மாநிலம், இங்குள்ள கலாச்சாரமும் தன்மையும் அமைப்பும் உளவியலும் வேறு

இங்கு வடக்கத்திய கலாச்சாராமான ஜி, ஆ வோஜி எல்லாம் சரிவராது, தூக்கி எறிந்துவிடுவார்கள்

ஆலமரமாக நின்ற காங்கிரஸ் இங்கு சரிந்தது அப்படித்தான், இங்கு பொருந்தாத குல்லா கலாச்சாரம் நேரு ட்ரெஸ் கலாச்சாரம் இன்னும் பல விஷயங்கள்தான் காங்கிரஸையே சரித்தன‌

அந்த காங்கிரசுக்கே அந்த பாடென்றால், முளை விடாத பாஜகவுக்கு என்னபாடோ?

அதனால் தமிழ் கலாச்சாரத்தில் இணைந்து, அதை காத்து கட்சி வளர்த்தால் உருப்படுவீர்கள்

மறாக ஜி.. ஹே என சொல்லிகொண்டே ஒரு அந்நிய தன்மையுடன் இருந்தால் இன்றுபோல் என்றும் டெப்பாசிட்டுக்காக மட்டும் போராடிகொண்டே இருப்பீர்கள்

எவனாது இனி “ஜி.. நம்ம கட்சி.. அமித்ஜி.. மோடிஜி” என வந்தால் அவ்வளவுதான்