நாயகிதேவியின் வரலாறு ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக மங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய வீரவரலாறு
இங்கு மறைக்கபட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது ஏன் இதை எல்லாம் வரலாற்றில் மறைத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றதுமுகமது கோரி இந்தியா வந்து பிரித்விராஜனை வென்று டெல்லியில் தன் ஆட்சியினை அமைத்தான் என்பதுதான் வரலாறு, பிரித்விராஜன் அவனுடன் செய்த வீர யுத்தம் மகத்தானது கண் இழந்த நிலையிலும் அவன் காட்டிய வீரம் வரலாற்றில் நிற்கின்றதுஇன்றும் இந்திய ஏவுகனை பிரித்வி பெயரை தாங்கி நிற்கின்றது, பாகிஸ்தானும் கோரி பெயரை வைத்து ஏவுகனை நிறுத்துகின்றது, அவர்கள் என்ன செய்வார்கள்? வந்தேறி கோரிதான் அவர்கள் காவலன்ஆனால் பிரித்விக்கு முன்பே ஒரு அரசி கோரியினை ஓட அடித்திருக்கின்றாள்அவள் பெயர் நாயகி தேவி, சாளுக்கிய வம்சத்தின் அரசியாக சோலங்கி எனும் குஜராத் கோவா பகுதியில் அரசு செலுத்தியிருக்கின்றாள் ,கணவன் இல்லை மாறாக தன் சிறுவயது மகனுக்கு பதிலாக ஆட்சி நடத்தியிருக்கின்றாள்பெண் ஆளும் அரசு என மட்டமாக எண்ணி சரணடைய ஓலை அனுப்பினான் கோரி, அதுவும் அவனோடு ஆப்கன் வருமாறு சீண்டல் வேறுநாயகி தேவி அஞ்சவில்லை, தந்திரமான திட்டம் செய்தாள், ஆம் அவனுக்கு மறுத்தால் அவன் நிச்சயம் நாட்டின்மேல் பாய்வான் என்பதால் அவனை திசை திருப்ப எண்ணிணாள்தான் அவனுடன் தனியாக சந்திக்க , குறிப்பிட்ட நாளில் கயகாதாராவில் அவனை வருகின்றேன் என சொல் என செய்தி அனுப்பினாள்சொன்னளே அன்றி, தன் படைவீரர்களில் தேர்ந்தோர் 20 ஆயிரம் பேரோடு ஒரு பாதுகாப்பினை பின்னால் செய்துவிட்டு கோரியினை சந்திக்க கிளம்பினாள்கோரி இம்மாதிரி விவகாரங்களில் தேர்ந்த தந்திரசாலி அவன் 50 ஆயிரம் வீரர்களை மறைந்திருக்க செய்து கயதாரா வந்தான்வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கிருஷ்ணன் கோவிலில் வேண்டிவிட்டு வந்த தேவி கோரியினை நேருக்கு நேர் சந்திக்கின்றாள், அவளின் வாள்வீச்சில் அஞ்சுகின்றான் கோரி, ஆனால் அவளை நெருங்கமுடியவில்லைவிட்டால் அவள் அவனை கொன்றுவிடும் ஆபத்தில் இருக்க, இனியும் தாமதிக்கா கோரிபடை களம் புகுந்தது, அதை கண்டதும் ராணியின் படைகளும் களமிறங்கினகோரிபக்கம் 50 ஆயிரம் பேர், ராணி பக்கம் 20 ஆயிரம் பேர்யுத்தம் கடுமையாக இருந்தது, ராணி நாயகி தேவி காளியின் அம்சமாக ஆடினாள். கோரியின் படைகள் துவம்சம் செய்யபட்டன. கோரியினை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்ததுகோரியின் படைகள் தோல்விக்கு திரும்பின, கோரி படுகாயமுற்றான். அவனை அவன் வீரர்கள் சூழ்ந்து காத்தனர், அதை உடைத்து கோரியினை முடிக்க கடுமையாக முயன்றாள் ராணிஅப்பொழுதுதான் அந்த துயரம் நடந்ததுநாயகிதேவி செய்த தந்திரம் அவளுக்கு எமனானது, கயதாரா என இடத்தை ராணி சொன்னவுடன், பாதுகாப்பான இடங்களில் தன் வீரர்களை முன்பே புதைத்திருந்தான் கோரிஅந்த படைகள் ராணியின் பின்பக்கமாக சூழ்ந்து அவளை தாக்கினயுத்தம் முடிந்தது என எல்லோரும் அசந்திருந்த நேரம், ராணி தாக்கபட்டார்ராணியினை சாலோங்கி வீரர்கள் சூழ , அந்த இடைவெளியில் முல்தானுக்கு தூக்கி செல்லபட்டான் கோரிராணி சாலோங்கி நாட்டுக்கு கொண்டு செல்லபட்டு சிறிது நாளில் உயிரிழந்தார்ராணியின் மரணத்தை உறுதிசெய்த பின்பே மறுபடி இந்தியா வந்தான் கோரி அதுவும் குஜராத் பக்கம் வரவில்லை மாறாக பிரித்விராஜனிடம் தோற்று ஓடி பின் பிரித்விராஜனின் மாமனாரை வளைத்து எப்படியோ வந்து அவனை கொன்று மாமனையும் கொன்று தன் ஆட்சியினை நிறுவினான்கோரி முகமதுவினை ஓட அடித்திருக்கின்றாள் நாயகிதேவி, 1171ம் வருடம் இந்த வீரபோர் நடந்திருக்கின்றதுகோரி கஜினி பாணியில் சோமநாதபுர ஆலயத்தை நோக்கி வரும்பொழுது அவனை அடித்துவிரட்டி துவம்சம் செய்து மரணபயத்தை காட்டியிருக்கின்றாள் நாயகிவரலாற்றில் ஜான்சிராணி, வேலு நாச்சியார் என வரிசை வருகின்றது, ஆழமாக சென்றால் ருத்ரம்மா, மங்கம்மா கதை இருக்கின்றதுஆனால் நாயகி தேவி வரலாறே இல்லை, ஆனால் அப்படி ஒரு மகா வீரபெண் இருந்திருக்கின்றாள்ஏன் இந்திய வரலாற்றில் அவளை போன்றோரை இன்னும் பல இடங்களில் ஆப்கானியரை ஓட அடித்தவர்களை மறைத்து கஜினி, கோரி எல்லாம் மாவீரர் என உருவாக்கபட்டனர்?இங்கு வரலாறு இந்திய பெருமைகளை மறைத்தே எழுதபட்டிருக்கின்றது, எத்தனை ஆயிரம் நாயகி தேவி எனும் நைக்கி தேவி மறைக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாதுநைக்கி தேவி எனும் நாயகி தேவியின் வீரவரலாறு இங்கு வணங்க வேண்டியது, ஆனால் நிக்கி கல்ராணி தெரிந்த அளவு நைக்கி ராணி தெரியாமல் மறைக்கபட்டிருப்பது வரலாற்று சோகம்இந்த மோதல்தான் அதாவது கோரிக்கும் ராணி நாயகிதேவிக்கும் நடந்த அந்த சரித்திர மோதல்தான் காஷ்மோரா படத்தில் காட்சியாக வந்ததுகோரி எனும் பெண் வெறிபிடித்த தளபதி காட்சியில் கார்த்தியும், நாயகிதேவி உருவில் நயனும் வந்தார்கள்காட்சியினை பார்த்து கைதட்டிய தமிழனுக்கு அதன் உண்மை கதையினை தேட கூட நேரமில்லை, அவன் அப்படித்தான்.நாயகிதேவியின் வரலாறு ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக மங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய வீரவரலாறுஇதை போன்றே மங்களூர் பக்கம் போர்த்துகீசியரை ஓட அடித்த ராணி அப்பக்கா என்பவரின் அதீவீர வரலாறு ஒன்று உண்டு அதை இன்னொரு முறை பார்க்கலாம்