நாஸ்ட்ராடாமஸ் பற்றிய தொடர்
நாஸ்ட்ராடாமஸ் பற்றி தொடர் எழுது என சிலர் சொல்கின்றார்கள்
அவரை பற்றி எழுதலாம், அவர் ஒரு யூத கிறிஸ்தவர். 1500 களில் பிரான்சில் வசித்தவர். யூதரிலும் ஜோதிடம் உண்டு அப்படியாக இவருக்கும் வந்திருக்கின்றது, பின்பு வருங்காலம் உரைக்கும் ஆற்றலும் வந்திருக்கின்றது
கோள்களை பற்றிய தீவிர ஆய்வில் இறங்கிய அவர், இப்படி எல்லாம் கிரகம் சஞ்சரிக்கும்பொழுது இப்படி எல்லாம் சக்தி மிக்கவர்கள் வருவார்கள், இதெல்லாம் நடக்கும் என கணித்ததாக அவர் வரலாறு சொல்கின்றது , கோள்களின் சஞ்சாரமே உலகை இயக்குவதாக நம்பி கணித்தார் நாஸ்டர்டாமஸ்
ஆச்சரியமான கணிப்புகள் அவை
அமெரிக்க உருவாக்கம், நெப்போலியன், ஹிட்லர், இங்கிலாந்து பேரரசு, ரஷ்ய புரட்சி, உலகப்போர், சீன எழுச்சி, இந்திரா படுகொலை என எல்லாவற்றையும் எழுதினார்
உலகமகா தீவிரவாதி ஒருவன் வருவான் என்றார், அது பின்லேடனும் இல்லை ஒருவேளை வடகொரிய தக்காளியாக இருக்கலாம்
ஒரு சிக்கல் என்னவென்றால் அவர் காலத்து மதவாதிகள் இதனை அனுமதிக்காததால் கமலஹாசனின் தமிழ்போல எழுதிவைத்துவிட்டார், அதனால் பல விஷயம் புரியாது
இன்னொன்று போலிகளும் சிலவற்றை கலந்துவிட்டனர், ஜெயமோகனின் மகாபாரதம் போல் ஆகிவிட்டது அவரின் நூல்
எனினும் அவர் கணிப்புகளில் பல சுவாரஸ்யம் உண்டு, நன்றாக படித்துவிட்டு எழுதலாம்,
முதலில் நன்றாக கவனமாக படிக்க வேண்டும்
ஏனென்றால் இவ்வளவு பெரும் பிரபலங்களை கணித்த நாஸ்டர்டாமஸ் நிச்சயம் குஷ்புவினையும் கணித்திருப்பார், அதை மறைத்துவிட்டனர் அல்லது குறிப்பால் அறியமுடியவில்லை
ஆக படித்துவிட்டு எழுதலாம்
ஒருவேளை குஷ்பு பற்றி நாஸ்டர்டாமஸ் சொல்லவில்லை என்றால் மனிதர் போலி ஜோதிடர் என முடிவுசெய்துவிடலாம்