நிச்சயம் அது மடத்தனம்
தமிழக அரசு நேற்று பெரும் பைத்தியகாரதனம் செய்துவிட்டதாக தோன்றுகின்றது, நிச்சயம் அது மடத்தனம்
தடை உத்தரவு என உடனே அறிவித்திருக்க வேண்டும், மாறாக ஒரு நாள் கழித்து தடை அதற்குள் ஊருக்கு செல்லுங்கள் என அனுமதிதத்து எல்லாம் மாபெரும் முட்டாள்தனம்
போக்குவரத்து ஒன்றே கொரோனா பரவ 80% காரணம் என்கின்றது ஆய்வு, இந்நிலையில் சென்னைக்குள் ஓடிய 3500 பேருந்துகளை திருச்சிவரை இயக்குவோம் என்பதெல்லாம் அபத்தம்
கவனியுங்கள் இந்த பயணிகள் வீட்டை விட்டு வந்து ஆட்டோவோ பொது போக்குவரத்திலொ ஏறி பஸ்நிலையம் வந்து ஆயிரகணக்கான பயணிகள் நடுவில் நீந்தி, பஸ்ஸில் இடம்பிடித்து..
இதில் ஒருவருக்கு ஒரே ஒருவருக்கு கொரோனா இருந்தால் என்னாகும்?
அது அந்த கூட்டத்திலே பல்லாயிரம் பேருக்கு பரவும், அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் பொழுது என்னாகும்?
ஆக கொரோனாவினை மாநிலம் முழுக்க பரப்பும் மகா முட்டாள்தனத்தை செய்கின்றது பழனிச்சாமி அரசு
சரி அரசுதான் அறிவித்தது, பயணிகளுக்கு அறிவு எங்கே போயிற்று?
ஊரெல்லாம் தடை என்றால் சென்னையிலும் தடை, ஊரிலும் தடை பின் எங்கே சென்று என்னாகபோகின்றது?
அவசர உதவிகளுக்கும் அத்திவாவசிய பொருளுக்கு பயமில்லை என சொன்னபின்னும் இந்த இக்கட்டான நேரத்தில் கிளம்பும் அவசரம் ஏன்?
தனித்திருப்பது சால சிறந்தது என சொன்னபின்பும், கூட்டத்தில் கலந்து நீந்தி அதன் பின் தனித்திருப்பேன் என்பதெல்லாம் என்ன வகை சிந்தனை?
அரசுக்கும் அறிவில்லை, மக்களுக்கும் அறிவில்லை
ஆனால் இது அரசோடோ அந்த பயணிகளுக்கும் உள்ள சிக்கல் அல்ல, ஏராளமான அப்பாவி மக்கள் இவர்களால் பாதிக்கபடுவர்
மாபெரும் முட்டாள்தனமான முடிவெடுத்த பயணிகளையும் அவர்கள் பின்னால் ஓடும் கொஞ்சமும் முன் யோசனையில்லா அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்
விஜயபாஸ்கர் பழனிச்சாமி இணையின் மிக பெரிய குளறுபடி இது, இதன் விளைவுகள் சாதாரணமாய் இரா..
குதிரைகளை விட்டுவிட்டு எந்த தொழுவுக்கு 144 போட போகின்றார்களோ தெரியவில்லை, இவர்களின் 144 நோக்கமே அடிபட்டு போயிற்று…