நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி
எத்தனை பேர் பிறந்த நாளைத்தான் பார்ப்பது, சரி அவருக்கும் பார்த்துவிடலாம்
நிச்சயம் அந்த சசிகலா மாபெரும் திறமைசாலி, படிப்பு இல்லை எனினும் இயற்கையான அறிவு அவருக்கு இருந்தது
இன்றளவும் மிக ஆச்சரியமானதும் புரிந்துகொள்ள முடியாதுமான உறவு சசிகலாவுக்கும் ஜெயாவுக்குமானது
ஜெயாவின் வாழ்க்கை தரம் வேறு , பிராமண குடும்பம் நுனிநாக்கு ஆங்கிலம், வாழ்க்கை முறை, சமூகம் எல்லாமே வேறு
சசிகலாவுக்கு எல்லாமே தலைகீழ்
ஆனாலும் பிடிவாதகாரியும் கடும் போக்கு கொண்ட இறுக்கமானவர் என ஆனானபட்ட ராமசந்திரனே சமாளிக்க முடியாத ஜெயாவினை எப்படி சசிகலா இவ்வளவு காலமும் நட்பாக கொண்டு சென்றார் என்பது ஆச்சரியமே
எம்ஜி ராமசந்திரனையே அடக்கி , கலைஞர் கருணாநிதி எனும் சாணக்கியனையே பல இடங்களில் ஓடவிட்ட ஜெயா சசிகலா எனும் அங்குசத்தின் முன்னால் அடங்கிகிடந்தெல்லாம் மாபெரும் ஆச்சரியம்
அது பயமுறுத்தலில் வந்திருக்கமுடியாது, அதை விட பெரும் அச்சுறுத்தல்களை எல்லாம் கடந்து வந்தவர் ஜெயா
மாறாக சசிகலா அவரின் ஏதோ ஒரு நம்பிக்கையினை பெற்றிருகின்றார் அதுதான் உண்மை
இன்று தமிழகத்தில் யாருக்குமில்லா ஜாதகம் சசிகலாவிடம் உண்டு
1987முதல் 2016 வரை நடந்த அனைத்து அரசியல் ஆட்டங்களின் மொத்த தரவும் அவரிடமே இருகின்றது
அதில் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி என எல்லா தரவுகளும் அடக்கம்
எவ்வளவோ தொழிலதிபர்களும் அவர்களின் ஜாதகங்களும் அடக்கம்
பெரும் ரகசியங்களை மறைத்துவைத்து அலையாடும் கடல் போல அவர் சிறையில் நடமாடிகொண்டிருக்கின்றார்
ஒரு நாள் அவரால் பெரும் அதிர்வுகளை கொடுக்க முடியும், ஏன் இப்பொழுதே முடியும்
ஆனால் தேர்ந்த முதிர்ச்சி கொண்ட சசிகலா நேரம் பார்த்து காத்துகொண்டிருக்கின்றார் என்பதுதான் உண்மை
சசிகலா ஏன் அரசியலில் தவிர்க்கமுடியா வரலாறு என்றால் ஜெயா என்பவர் ராஜாஜிக்கு பின் பிராமணருக்கு வராது வந்த மாமணியாக கொண்டாடபட்டார்
ஆனால் அந்த முரட்டு குதிரையினை அலெக்ஸாண்டர் அடக்கியது போல் அடக்கி திருப்பி திராவிட அரசியல் செய்ய வைத்தார் சசிகலா
அதன்முன் சோ ராமசாமி எனும் ஜாம்பவானே தோற்று ஓடினார்
ஆழ கவனித்தால் சசிகலா மாபெரும் திறமைசாலி என்பதும் ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர் என்பதும் உங்களுக்கே விளங்கும்
அவருக்கு இன்னும் காலமிருக்கின்றது
இனிதான் காலமே இருக்கின்றது என்கின்றது ஒருகோஷ்டி
எனினும் ஒரு புயல் இங்கு காத்திருக்கின்றது, ஒரு எரிமலை உறங்கிகொண்டிருக்கின்றது
அதற்கான காலம் வரும்பொழுது இங்கு பிரளயம் வெடிக்கலாம், வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது
அலெக்ஸாண்டரின் புக்கிலேஸ் குதிரை இல்லா நிலையிலும் உலகம் அவன் கையில் இருந்தது
ஜெயா இல்லா நிலையிலும் சசிகலா பெரும் தாக்கத்தை உருவாக்க வாய்ப்பு இருக்கின்றது
இந்த பன்னீர், பழனிச்சாமி , ஜெயக்குமார் எல்லாம் நம்பகூடிய கோஷ்டி என கருதுகின்றீர்கள்?
ஆட்சி இல்லை என்றால் உடனே சசிகலாவோடு ஓடி சென்று ஒட்டிகொண்டு முதுகினை மிதிக்க கொடுப்பார்கள்
அதனால் சசிகலாவுக்கு எதிர்காலத்தில் பெரும் வாழ்வு இருக்கலாம்
அந்த சாதுர்யமான சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…