நிச்சயம் அந்த விளையாட்டும் ஒருபக்கம் நடந்து கொண்டேதான் இருக்கும்
பண்டைய காலங்களில் ஒரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் சில காரியங்களை செய்வார்களாம்
அதாவது எதிரிநாட்டின் பசுக்கள் எங்கெல்லாம் மேயுமோ அங்கெல்லாம் சென்று அதை கொள்ளையிடுவார்களாம், கொள்ளை போன பசுக்களுக்காக அரசன் சண்டைக்கு செல்வானாம் யுத்தம் தொடங்குமாம்
இது கிருஷ்ணபரமாத்மா காலத்தில் இருந்து புறநானூறு காலத்தில் தொடர்ந்து வெள்ளையனுக்கு முந்தைய காலம் வரை இருந்தது
அப்படித்தான் இப்பொழுது ஈரானுடன் போரினை தொடங்க அதன் கப்பல்களை சீண்டிகொண்டிருக்கின்றார்கள்
வளைகுடா பகுதியில் ஈரானுக்கும் அதன் எதிர் கோஷ்டிக்கும் அறிவிக்கபடாத கப்பல் யுத்தமே நடக்கின்றது
சில கப்பல்கள் தாக்கபடுவது, சில கப்பல்கள் மிரட்டபடுவது, சில கப்பல்களை ஆளில்லா ரிமோட் படகுகள் நெருங்கி வந்து எச்சரிப்பது என ஒரே கடல் விளையாட்டு
இவர்கள் அவர்கள் பக்கம் வந்தால் ஈரான் விரட்டுவது, ஈரானிய கப்பல்கள் ஓமான் கடல் எல்லையினை தாண்டி வந்தவுடன் இவர்கள் விரட்டுவது என கடல் விளையாட்டு களை கட்டுகின்றது.
இந்த விளையாட்டு நிச்சயம் போரில்தான் முடியுமா இல்லை கடலில் கொஞ்சகாலம் விளையாடிவிட்டு ஓய்ந்துவிடுவார்களா என்பது தெரியவில்லை
கடலில் கப்பல்களும் வேக படகுகளும் விளையாடுவது அப்பட்டமாக தெரிந்து செய்தியாகின்றது
கடலடியில் நீர் மூழ்கிகளும் வான்பரப்பில் சில விளையாட்டுகளும் எப்படி நடக்கின்றன என்பது பற்றி செய்தி இல்லை
ஆனால் நிச்சயம் அந்த விளையாட்டும் ஒருபக்கம் நடந்து கொண்டேதான் இருக்கும்.