நிச்சயம் அவரின் ஜாதகம் மகா உச்சம்
நிச்சயம் அவரின் ஜாதகம் மகா உச்சம், இல்லையென்றால் எங்கோ இத்தாலியின் ஒரு மூலையில் பிறந்து, இந்தியாவின் உச்ச அதிகாரமிக்க ஒருவராக மாறியிருக்க முடியாது
அவர் பெயர் சோனியா மைனோ, அவரின் தந்தை முசோலியின் படை வீரரான நாஜி அபிமானி. போரினால் எங்கெல்லாமோ சுற்றிய குடும்பத்தில் படிப்பை முடிக்கமுடியாமல் கிடைத்த வேலையினை லண்டனில் செய்துகொண்டிருந்தவர் அவர்
விதி மிக சரியாக ராஜிவினை சந்திக்க வைத்தது. பெரும் குடும்பத்தின் வாரிசும் இன்னும் பல தகுதியும் கொண்டிருந்த ராஜிவ் சோனியாவிடம் விழுந்தது விதி, சோனியாவின் நல் ஊழ் அது.
சோனியா இந்தியாவினை ஆளவேண்டும் எனும் விதி தொடர்ந்து ஆடியது. சோனியா காலடி வைத்த நேரமா இல்லையா என்பது வேறுவிஷயம். ஆனால் சம்பவங்கள் அவரை அரசியலுக்கு இழுத்து வந்தன
இந்திரா தன் இளைய மருமகள் மேனகாவினை ஓரங்கட்டி சொனியாவினை அணைத்தது அவரின் அதிர்ஷ்டம், சஞ்சய்காந்தியின் அகால மரணம் சோனியாவுக்கான வாசலை திறந்தது
இந்திராவின் மரணம் ராஜிவினை அழைத்துவர, அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவும் சிதறடிக்கபட காங்கிரஸின் அரியாசனம் சோனியாவினை அழைத்தது
இந்த காங்கிரசும் திமுகவும் குணத்தால் ஒன்று. இரண்டுமே அடிவருடி கோஷ்டிகள். ஒரு குடும்பம் தவிர தங்களை யாரும் ஆளமுடியாது என மனபூர்வமாக நம்புபவை
நிச்சயம் சோனியாவினை 1990களில் இருந்து வெளியேற்றியிருக்கலாம், ராஜிவுக்கு பின்னரான காங்கிரஸ் நேரு குடும்ப பிடி இல்லா காங்கிரசாக இருந்தது, ஆனால் உட்கட்சி குழப்பங்கள் அதிகரித்தன
அவர்கள் அப்படித்தான், இதனால் மறுபடியும் நேரு குடும்பத்துக்கு அழைப்பு விடுத்து சோனியாவினை அமர வைத்தனர்
இதில் எதிர்ப்பும் வலுத்தது, சரத்பவார் முதல் பலர் பிரிந்தனர். காங்கிரஸ் வலுவிழந்தது. அதுதான் இன்றுவரை தொடர்கின்றது
சோனியா காங்கிரஸை நிறுத்தினாரா என்றால் இல்லை, என்னதான் அவர் இந்தியராக சேலை உடுத்தி முக்காடு போட்டு வந்தாலும் தேசம் முழுக்க அவரை விலக்கித்தான் வைத்தது
சர்ச்சைகள் அவரை சூழ்ந்தன. அது அரசியலும் ஆனது
சஞ்சய், இந்திரா, ராஜிவின் மர்ம மரணங்கள் அவர்மேல் கேள்விகனைகளை தொடுத்தன, இந்திரா விலக்கி வைத்த மேனகாவினை சோனியா கடைசிவரை அருகே சேர்க்காததும் ஆச்சரியம்
கட்சி நலன் என்றால் சேர்த்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை
சோனியா மேலான பெரும் சர்ச்சை இரண்டு முதலாவது ராஜிவ் கொலையாளி என தெரிந்தும் பிரபாகரனை அவர் விட்டுவைத்தது, புலிகளின் கூட்டாளிகளான திமுகவுடன் அவர் கரம் கோர்த்தது
ஜெயலலிதா பின்னாளில் சோனியாவினை மிக தீவிரமாக எதிர்க்க இதுதான் காரணம்
கருணாநிதி சொக்கதங்கம் என பாராட்டும் பொழுதே சோனியா மேல் சந்தேகம் வந்தது, பூனை ஒன்று கருவாட்டு பானை சொந்தகாரியினை பாராட்டுவது எப்படி சரியாகும்?

சோனியா கட்சியினை வளர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ராகுலை தலைவராக்குமுன் அவரை உபியில் முதல்வராக்கியிருக்கலாம் பிரியங்காவினை ஆக்கியிருக்கலாம்
மாறாக அரச தோரணையுடன் அவர்களை நடத்தியதே உபியில் காங்கிரசுக்கான அடி, நேருவின் சொந்த மாநிலமாயினும் இம்மாதிரி அணுகுமுறைகளால் அக்கட்சி அங்கு பீடம் இழந்தது
மாநில சரத்பவார், இந்த ஜெகன்மோகன் ரெட்டி போன்றோரை தனியே விட்டது பெரும் தவறு, மறுபடி அவர்களை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
நிச்சயம் சோனியா சில சர்ச்சைகளின் பிறப்பிடம், ராஜிவின் அரசியல் வாழ்வை சோலிமுடித்த அந்த போபர்ஸின் குவாத்ரோச்சி இத்தாலிக்காரன் , சோனியாவின் உறவுகளில் ஒன்று
ராஜிவ் கொலையில் அந்த கோஷ்டியும் புலிகளோடு கரம் கோர்த்தது பின்னாளில் தெரிந்தது
சோனியா கடைசிவரை குவாத்ரோச்சியினை இந்திய சட்டத்தின் முன் நிறுத்த முயலவில்லை. ஆம் அவர் நினைத்திருந்தால் தூக்கி வந்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை
புலிகளையும் ஒழித்துகட்ட அவர் விரும்பவில்லை, ஏனோ தயங்கியிருக்கின்றார். சந்திரசாமிக்கு தொடர்பு இருந்தும் அவரை ஏனோ சோனியா நெருங்கவில்லை
சோனியா அதிகாரங்களில் இருந்த காலத்தில் எல்லாம் இந்நாடு பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைகாடாக இருந்திருக்கின்றது, பயங்கரவாதங்களும் தலைவிரித்தாடியிருக்கின்றன ஆனால் எதையும் அவர் பெரிதாக தடுக்கவில்லை
மன்மோகன் சிங்கினை தன் பினாமியாக வைக்க அவருக்கு வந்த கட்டளை எங்கிருந்து வந்தது என்பதுதான் தெரியவில்லை, மன்மோகன் காலத்து சீர்திருத்தமே இன்று மல்லையாவும் இன்னும் பலரும் உருவாகி ஓடி ஓளிய காரணம்
இன்னும் ஏராளம் சொன்னாலும் காங்கிரஸ் சோனியா காலத்தில் துவண்டது சுருங்கியது
சோனியா என்பவர் மர்மத்தின் பேர் உருவம், இந்நாட்டை நேசிக்கும் எல்லோரும் அவரை மொத்தமாக எதிர்ப்பதிலும் சில விஷயங்கள் இல்லாமல் இல்லை
இந்நாட்டுக்கும் இநாட்டின் பாதுகாப்புக்க்கும் ஏன் கட்சிக்கும் கூட அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை
சில தரவுகள் சொன்னபடி ராஜிவினை மணந்து வெளிநாட்டில் குடியேறி அமைதியான வாழ்க்கை வாழ விரும்பியவர்தான் சோனியா, ஆனால் சில சக்திகள் அவரை பயன்படுத்திகொண்டன
‘
சசிகலா ஜெயாவினை கட்டுபடுத்தியது போல் சோனியாவினை ஒரு கும்பல் ஆட்டுவித்தது, இது சஞ்சய் கொலை, இந்திரா கொலையில் பலத்த சர்ச்சையானது
குறிப்பாக இந்திரா அன்று குண்டு துளைக்கா ஆடை அணியவில்லை என்பதை கொலையாளிகளுக்கு சொன்னது யார் எனும் கேள்விக்கான பதில் வரலாற்றிலே இல்லை
ராஜிவ் கொலையாளிகளையும் குவாத்ரோச்சியினையும் ஏன் சோனியா விட்டுவைத்தார் என்பதற்கும், தன் கணவனின் கொலையாளிகளின் மரண தண்டனையினை ஏன் ரத்து செய்ய சொன்னார் என்பதற்கும் பதில் இல்லை
காட் ஒப்பந்தம் , பொருளாதார சீர்திருத்ததை எல்லாம் செய்ய மன்மோகனுக்கு ஏன் உத்தரவு கொடுத்தார் என்பதும், இந்திய ராணுவத்தை பலபடுத்தும் விஷயங்களை ஏன் ஒத்திபோட்டார் என்பதற்கும் பதில் இல்லை
கட்சி உடைந்து இந்நாட்டில் பிரிவினைவாத கட்சிகள் தலைதூக்கும் பொழுது சோனியா கொஞ்சமும் கவலைபட்டதாக தெரியவில்லை மாறாக அவர்களுடன் கூட்டணி போதும் எனும் நிலைபாட்டில் இருந்தார்
பெரும் ஊழல் தலைவிரித்தாடியபொழுதும் கூட்டணிகளை கண்டிக்க அவர் விரும்பவில்லை என்பது அவரின் பலவீனத்தை சொன்னது
திமுகவுக்கு தமிழகத்தில் ஆதரவு அளித்துகொண்டே, டெல்லியில் அது தனக்கு குழிவெட்டுவதை கண்டிக்க முடியாத அளவு பலவீனமான தலைவராக இருந்தார்.
தேசம் அவரை கவனித்துகொண்டே இருந்தது, ஒரு கட்டத்தில் தூக்கி எறிந்தது
அப்பொழுதாவது சுதாரித்தாரா என்றால் இல்லை, மாறாக அனுபவமில்லா தன் மகனுக்கு முடிசூட்டினார் அது இன்னும் சீரழிவினை கொண்டுவந்தது
ராகுலை மன்மோகன் அவையில் அமைச்சராக்கியிருக்கலாம் இல்லை உபி முதல்வராக்கி அனுபவம் பெற்று நல்ல தலைவராக உருவாக்கியிருக்கலாம்
அதையும் சோனியா செய்யவில்லை
ஆக நாட்டுக்கும் ஏதும் செய்யவில்லை, காங்கிரசுக்கும் நல்லது செய்யவில்லை அடுத்தகட்ட காங்கிரஸ் தலைவர் உருவாகவும் வழிவிடவில்லை
விளைவு கருணாநிதி திமுகவினை கெடுத்தது போல சோனியா காங்கிரசை சுத்தமாக கெடுத்துவிட்டார் இனி அது வளர்ந்துவருவது மகா சிரமம்
சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ் போன்ற சில பிம்பங்கள் கையில் கிடைத்தால் அது உருப்படும் மாறாக ராகுல்காந்தி அதை உருப்பட விடமாட்டார், காங்கிரஸின் கோஷ்டி பூசலும் விடாது
சோனியாவின் மர்மங்கள் இங்கு தீர்க்கபடாது, அது முடியவும் முடியாது. அவர் அமைதியாக வெளியேறுதலே அவருக்கு நலம்
ராஜிவின் திருமணம் அவர் வீட்டை மட்டுமல்ல காங்கிரசையும் நாட்டையுமே மாற்றி போட்டது என்பதுதான் நிஜம்
இதனால்தான் என்னமோ பாஜக கோஷ்டிகள் திருமணமே செய்வதில்லை போலிருக்கின்றது
இன்று சோனியாவின் பிறந்த நாள், அம்மணி இந்திய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமலே இருந்ததும், காங்கிரசின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் இருந்ததும் , ஒரு பொம்மையாக வலம் வந்ததுமே காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம்
நாம் இந்தியன், பாஜக எனும் தேசிய கட்சிக்கு ஈடுகொடுக்கும் இன்னொரு தேசிய கட்சி காங்கிரஸை தவிர இப்போதைக்கு சாத்தியமில்லை
நாடு நலம்பெற காங்கிரஸ் பலம்பெற வேண்டியது அவசியம், இல்லையேல் நாட்டில் ஒற்றை கட்சி அதிகாரம் வரும், அது சரியல்ல
காங்கிரஸ் பலம்பெற சோனியா இருக்கும்வரை நடக்காது, ராகுல்காந்தியால் நன்மை விளையாது
சோனியா மற்ற தலைவர்களுக்கு வழிவிட வேண்டிய நேரமிது, காங்கிரஸிலும் இந்திரா போல ஒரு இரும்பு தலமை உருவாகட்டும், தேசம் செழிக்கட்டும்