நிச்சயம் இந்த படத்தை கடந்து செல்ல முடியவில்லை

நிச்சயம் இந்த படத்தை கடந்து செல்ல முடியவில்லைபாரம்பரியமான குடும்பம், பெரும் வெளிநாட்டு கல்வி, சென்ற இடமெல்லாம் சிறப்பு, வார்த்தைகளின் அர்த்தமும் பொருளும் ஒரு பெரும் பண்பாளரின் குடும்ப சிறப்பை சொல்லும் அழகு, தமிழ்நாட்டின் பெருமித‌ அடையாளமாக வலம் வந்த உருவம் இதுகாலம் இப்படி எல்லாமா ஆடும்?தளர்ந்துவிட்ட உடலோடும், ஒரு விரக்தி நிறைந்த பார்வையோடும் , களை இழந்த முகமாக கவலை படர்ந்த ரேகையோடும் அந்த மனிதனை பார்க்கமுடியவில்லைஅதுவும் அந்த கண்கள்…வாழ்ந்து கெட்ட மகாராஜாவினை காணும் ஒரு சாபம் நம் கண்ணுக்கு கிடைத்திருப்பது சோகம்மெலிந்துவிட்ட சிங்கம் போல் அங்கம் தளர்ந்து காட்சியளிக்கும் கோலம் கல் மனதையும் கரையவைக்கும் காட்சிவாழ்ந்து கெடுதல் என்பது வாழ்வின் மிக பெரும் சாபங்களில் ஒன்று, எல்லா மனமும் அதை ஏற்று கொள்ளாது,கொடுமையிலெல்லாம் பெரும் கொடுமை அது, ஆயிரம் ஆணிகளோடு சிலுவையில் அறைவது போன்ற வலி அதுஅந்த மனிதனை அவரின் கடந்த கால பெருமைகளுக்காக வீட்டு காவலில் வைத்து விசாரிக்கலாம், கொஞ்சம் தளர்வுகளை கொடுக்கத்தான் செய்யலாம்ஆனால் செய்வார்களா? அவர்களின் நோக்கமே இந்த கோலமல்லவா?சிவநேச செல்வர்கள் மிகுந்த செட்டிநாட்டு சிதம்பரத்தின் நெற்றியில் எந்நாளும் திருநீறு மட்டும் மிஸ்ஸிங், அந்த சாபம்தானோ என்னவோ மகன் வடிவில் ஏதோ பழிவாங்கிற்று..சோதனைகாலத்தின் உச்சத்தில் இருக்கும் சிதம்பரம் மறுபடியும் மீண்டுவரட்டும்,கெட்டபின்பு ஞானி என்பது போல் இனி பெரும் ஞானத்துடன் அவர் வரட்டும்