நித்திக்கு ஞானம் கொடுத்தது இத்தேசமும் அதன் மதமும்
நித்திக்கு ஞானம் கொடுத்தது இத்தேசமும் அதன் மதமும்
அவருக்கு இடமளித்து வரமளித்து ஞானம் அளித்ததும் இந்நாடும் இந்நாட்டு சனாதன தர்மமும்
அவரின் கல்விபணியும் , ஞான பணியும் , ஆன்மீகபணியும் இந்நாட்டு மக்களுக்கு தேவையா? இல்லை எங்கோ இருக்கும் மிலேச்ச ஐரோப்பியருக்கு தேவையா?
உண்மையான துறவி என்றால் இந்நாட்டில் ஏற்றவேண்டிய விளக்கினை இந்நாட்டில் ஏற்றவேண்டிய ஜோதியினை பல கடல்கடந்து மலைகடந்து இன்னொரு நாட்டின் இனத்தின் நடுவில் நித்தி ஏற்ற முனைப்பாரா?
இந்நாட்டிலே நல்ல இந்து துறவியாக அவர் செய்யவேண்டிய பணி ஏராளம் இருக்கும் பொழுது அந்நிய நாடும் தீவும் ஏன்?
நான் அழகி என ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரியங்கா சோப்ராவுக்கும், நான் ஞானி என அமெரிக்காவுக்கு ஓடும் நித்திக்கும் என்ன வித்தியாசம்?
துறவிக்கும் தொழிலதிபருக்கும் வித்தியாசமில்லையா? சரவணபவன் உணவகம் அமெரிக்காவில் தொடங்கபடுவது பசியாற்றவா?
ஞானத்தை முதலீடு செய்பவன் துறவியா இல்லை தொழிலதிபரா?
இதற்கு பதில் கேட்டால் ஒரு பயலிடமும் இல்லை அந்த சீட கோடிகளிடமும் இல்லை
மாறாக நம்மை திட்டி கொண்டிருக்கின்றார்கள்.