நித்திசாமி நோக்கி சிவன் தன் நெற்றிகண்ணை திறந்துவிட்டார்
சாரா லாண்டர் எனும் கனடிய பெண் நித்திசாமியின் முன்னாள் சீடர், அம்மணி நித்தி தன்னை சிவனாகவும் சீடபெண்ணான தன்னை பார்வதியாகவும் கருதி காம சேட்டை புரிந்தார் என குற்றசாட்டை பெங்களூர் காவல்துறையிடம் கொடுக்கின்றது
அம்மணி வந்ததை தொடர்ந்து ஏராளமானோர் புகார்களை குவிக்கின்றனர், ஆஸ்திரேலிய ஹரன் பாலசிங்கம் என்பவர் தன் சொத்துக்களை விற்று ஆசிரமத்தில் கொடுத்து சேவையாற்ற வந்த ஹரன், ஆசிரம மர்ம பக்கங்களை கண்டபின் ஆடிவிட்டாராம் அவரும் பிராது கொடுக்க வந்திருக்கின்றார்
அமெரிக்காவினை சேர்ந்த கிறிஸ்டி இன்டிகா எனும் பெண் மன உளைச்சல் மற்றும் விரக்தியில் ஆறுதல் பெற அங்கு வந்ததாகவும் நித்தி 30 லட்சரூபாய் ஏமாற்றிவிட்டதாகவும் சொல்கின்றது
குற்றசாட்டுக்கள் கடுமையாக குவிகின்றன, நித்தி சாமி வெஸ்ட் இண்டீஸ் பக்கம் இருந்து கொண்டு தன் மந்தகாச புன்னகையினை வீசிகொண்டிருக்கின்றார், இனி சாமி இந்தியா பக்கம் வரமுடியாது போல தோன்றுகின்றது அவ்வளவு வழக்குகள் குவிகின்றன
மன்மதனையே எரித்த தன் பெயரை சொல்லிகொண்டு காம சேட்டை புரிந்த நித்திசாமி நோக்கி சிவன் தன் நெற்றிகண்ணை திறந்துவிட்டார் என்பது மட்டும் புரிகின்றது.