நித்திசாமி விவகாரத்தில் எல்லோரும் சொல்வதும் பொய் என்பதுதான் நிஜம்
நித்திசாமி விவகாரத்தில் எல்லோரும் சொல்வதும் பொய் என்பதுதான் நிஜம், அந்த அளவு ஆளாளுக்கு பொய் சோல்லிகொண்டிருக்கின்றார்கள்
உண்மையில் புகார் கொடுத்த கோஷ்டிகள் பல்லாண்டுகாலம் அவரோடுதான் இருந்திருக்கின்றது, சாமி போலி என தெரிய பல ஆண்டுகளா ஆகும்?, விஷயம் அது அல்ல வேறு எங்கோ சிக்கல் இருக்கின்றது
சாமியாவது உண்மை சொல்கின்றது என்றால் இல்லை, என்ன இருந்தாலும் ஒரு இந்திய குடிமகன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல் நாட்டை விட்டு வெளியே இருப்பது சட்டபடி குற்றம், மக்களுக்கு ஆன்மீக வழி காட்டுவதாக சொல்லும் சாமி , இப்படி சட்டமீறலை செய்து வழிகாட்டுவதும் சரியல்ல
அரசும் சொதப்புகின்றது, ஈக்வெடார் நாடு நித்தி இங்கு இல்லை என சொன்னபின்பும் அவர் எங்கு இருக்கின்றார் என தெரியாமல் தடுமாறுகின்றது
சாமி அனுதினமும் வீடியோ வெளியிடும் நிலையில் அதன் மூலத்தையும் அது முதலில் பதிவேற்றம் செய்யும் இடத்தை பிடித்தாலே சாமியினை தூக்கலாம், விஷயம் எளிது ஆனால் அதெல்லாம் அரசு செய்யவில்லை
இது வேறு ஏதோ விவகாரம், சாமி சொன்னது பாதி கட்டுகதை மீதி என ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு பின்னணியில் சாமியும் அரசும் பேசிகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்
சாமி இப்பொழுது ஹைத்தி நாட்டில் அதாவது அமெரிக்காவின் மிக அருகில் இருப்பதாக கடைசி கட்ட செய்திகள் கசிகின்றன, இந்த நாடகம் இப்போதைக்கு நிற்பதாக தெரியவில்லை
இனி டிரம்புக்கோ இல்லை மைக் பாம்பியாவுக்கோ முட்டுவலி வந்து சாமி அதை சுகமாக்கிவிட்டால் அவ்வளவுதான்
அதன் பின் மோடி அமெரிக்கா செல்லும்பொழுது அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் இருந்து தன் மந்தகாச புன்னகையுடன் “ஹலோ மோடி, சுவாமி நித்தியானந்தா நமஹ என சொல்லுங்கள் , அமெரிக்கா அப்படித்தான் சொல்லிகொண்டிருகின்றது” என சாமி சொன்னாலும் சொல்லலாம்