நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்லபடுகின்றது

குஜராத் ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தபட்ட சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்லபடுகின்றது

இப்பொழுதெல்லாம் நித்திசாமியின் சீடர்கள் முகநூலில் அதிகம் உண்டு, ஏன் சாமியே முகநூலிலும் உண்டு

குஜராத்தில் நடந்த சம்பவம் பற்றி சாமி தரப்பில் விளக்கம் இன்னும் அளிக்கபடவில்லை மாறாக குஜராத் காவல்துறை ஆணையரே சாமி வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்கின்றார்

துறவு என்பதும் ஆன்மீகம் என்பதும் வேறுமாதிரியானவை

ரமண மகரிஷி இருந்தார், இந்த யோகிராம் சுரத்குமார் போல எவ்வளவோ மகான்கள் திருவண்ணாமலை பக்கம் இருந்தார்கள்

ஓசைபடாத ஆன்மீக மையங்கள் இங்கு எவ்வளவோ உண்டு

நித்திசாமி அடிக்கடி சர்ச்சையில் சிக்குகின்றார், ஆம் ஆன்மீகமும் ஆடம்பரமும் கலக்கமுடியாதவை,

கலந்தால் இரண்டில் ஒன்று ஒன்றை விழுங்கிவிடும் என்பது ஆன்மீக அடிப்படை தத்துவம்