நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை
சுதந்திரம் வாங்கி மக்களாட்சி வந்து கிட்டதட்ட 73 ஆண்டுகள் ஆகின்றது
இன்றைக்கு கூட, அதுவும் வெளிநாட்டில் பணியாற்றும் பிராமண பெண் இன்னொரு இனத்துக்காரனை திருமணம் செய்யும் நிலையில் அவள் தாய்க்கு எவ்வளவு மிரட்டல்?
இன்றே அதாவது மாறிவிட்ட காலங்களிலே இவ்வளவு மிரட்டல் என்றால் பாரதியார் எவ்வளவு அவமானபடுத்தபட்டிருப்பார்?
பாரதிக்கு முந்தின காலங்கள் எப்படி இருந்திருக்கும்?
நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை
பட்டமரத்திற்கே இந்தபாடு என்றால் பச்சை மரம் என்னபாடு பட்டிருக்கும்?
என் அருமை பாரதியே, சீனிவாச ராமானுஜமே உங்களின் வலி இப்பொழுதுதான் புரிகின்றது
உங்களுக்கே அந்நிலை என்றால் மற்ற இனங்களின் கதி எப்படி இருந்திருக்கும்?
வெள்ளையன் இங்குள்ள அரசர்களை அழிக்கும்பொழுது பிராமணனுக்கு கவலை இல்லை
அவன் இந்நாட்டின் செல்வங்களை கொள்ளையிட்டபொழுது பிராமணனுக்கு கவலை இல்லை
அவன் எல்லா சாதிக்கும் கல்வி கொடுத்து, மத அடையாளம் கொடுத்து இந்துமதத்தின் அடிமடியில் கைவைத்தபொழுதுதான் இங்கு பிராமணர் ஏற்றிவைத்த சுதந்திர போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது என எங்கோ படித்த வரி நினைவுக்கு வருகின்றது
பிராமணரின் அடிப்படை கட்டுமான ஆதாரத்தில் மட்டும் அவன் கை வைக்கவில்லை என்றால் இங்கு சுதந்திர போராட்டமே நடந்திருக்காது என்பது உண்மையோ என்னமோ?
