நில உச்சவரம்பு சட்டம்
நில உச்சவரம்பு சட்டத்தில் மூப்பனார் செய்த காரியம் தெரியுமா?, உக்கடை தேவர் செய்த சாதுர்யம் தெரியுமா? விஸ்வநாத தேவர் செய்த அட்டகாசம் தெரியுமா?
இதெல்லாம் 1960களிலே சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியவர் கலைஞர்
நில சுவாந்தார்களின் பினாமியான டிரஸ்டுகளையும் இன்னபிற அறகட்டளைகளையின் உண்மை முகத்தையும் சட்டசபையில் கிழித்தெறிந்தவர் கலைஞர் என உபிக்கள் கடும் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கின்றன
இதே காலகட்டத்தில் பசும்பொன் தேவரும் தனக்கு சொந்தமான நிலங்களை பலவாறு பிரித்து கொடுத்து நில சீர்திருத்த காலங்களில் சிக்கல் வராதவாறு காத்துகொண்டார்
அது பற்றி கலைஞரோ திமுகவோ ஒரு வார்த்தை பேசியிருக்குமா?
ம்ம்..ஹூம், பேசியதாக வரலாறே இல்லை , பேசினால் என்னாகும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும்
சரி மூப்பனார் தவறே செய்திருந்தாலும், அவர் நிலங்களை ஏழைகளுக்கு கொடுக்காமல் அரசை ஏமாற்றியே இருந்தாலும் அப்படி ஒரு வாதத்துக்கு வைத்திருந்தாலும் பின்னாளில் என்னாயிற்று?
1996ல் அதே மூப்பனாருடன் இணைந்து ஆட்சியினை பிடித்தார் கலைஞர், மத்தியிலும் பதவி
அப்பொழுதெல்லாம் அந்த கலைஞர் ஏன் அமைதி காத்தார்?
ஆக தனக்கு சாதகம் என்றால் ஒருவரை அணைப்பதும் தனக்கு எதிரான கட்சி என்றால் அவரை இழுத்து போட்டு சாத்துவதுமா கலைஞரின் அரசியல்?
இந்த உடன் பிறப்புகள் இருக்கின்றதே, எதையாவது ஆர்வகோளாறில் சொல்லிவிடுமே அன்றி அது கலைஞருக்கு எப்படி எல்லாம் சிக்கலை கொண்டுவரும் என்பதை பற்றி யோசிப்பதே இல்லை
கேளுங்கள், 1960களில் மூப்பனாரை விமர்சித்தவர் அடுத்த 33 ஆண்டுகளில் அவரோடு ஏன் குலாவினார், ஒரு சென்ட் நிலத்தை மீட்டாரா? என்றால் சத்தமே வராது
கலைஞர் டிரஸ்டுகளை சாடினாராம்
முரசொலி அறக்கட்டளைக்கும், வீரமணியின் பெரியார் அறகட்டளைக்குமான சொத்துமதிப்பு பற்றி என்றாவது யாராவது பேசுவார்களா?
ஏம்மா Devi Somasundaram மூப்பனாருடன் கலைஞர் பின்னாளில் கூட்டாளியாக பவனிவந்ததையும் , அப்பொழுது அரை சென்ட் நிலம் கூட ஏழை மக்களுக்கு அவரிடம் இருந்து கலைஞர் பறித்துகொடுக்க விரும்பவில்லை என்பது உனக்குமா தெரியாது?

