நீட்டி முழங்கிவிட்டார் அங்கிள் சைமன்

இலங்கையில் தமிழர்மேல் மறுபடி பெரும் பழி சுமத்தி இலங்கை அரசு அழித்துவிடுமோ என அஞ்சுகின்றேன், இதெல்லாம் தமிழர் விரோதம்

இப்படி சொல்லியிருப்பது யாரென்றால் அங்கிள் சைமன் இன்னும் நிறைய நீட்டி முழங்கிவிட்டார்

அதாவது தமிழர்கள் அதிகம் உள்ள பக்கம் இத்தாக்குதல் நடந்திருகின்றதாம் அதனால் இதில் சிங்கள சதியும் இருக்கலாமாம்

செத்ததில் சிங்கள கிறிஸ்தவரும் சிலர் உண்டு என்பது அன்னாருக்கு தெரியவில்லை, தமிழ் சிங்கள கலப்பு கிறிஸ்தவ திருமணம் அங்கு அதிகம்

சைமன் இப்படி ஒருமாதிரி பேசவும் இலங்கை தரப்பு இந்தியாவிடம் தமிழகத்தில் இவரால் புது குழப்பம் ஏற்படலாம் என சொல்லியிருப்பதாக தெரிகின்றது

இந்தியா தரப்பில் கொஞ்சமும் யோசிக்காமல் ஓ அவரா, அவரை எல்லாமா பற்றி கேட்கின்றீர்கள்? தும்பிகளிடம் கைதட்டல் வாங்க ஏதாவது சொல்லியிருப்பார் மற்றபடி ஒன்றுமில்லை என முடித்துவிட்டார்கள்.

நாமே நம்நாட்டில் குண்டு வைத்தோமா? என்ன சொல்கின்றார் இந்த நபர் என தலையில் அடிக்கின்றது இலங்கை

கவனியுங்கள் நடந்திருப்பது பெரும் நாசவேலை, எல்லா நாட்டுகாரனும் செத்திருக்கின்றான், நடந்த இடம் அவன் கூடிய தேவாலயம்

இன்னொரு பக்கம் நட்சத்திர ஹோட்டல்கள்

சிங்களர் தமிழர் என இரு தரப்பிலும் கிறிஸ்தவர் ஏராளம் இருக்க அங்கிளின் குருட்டு பார்வை எங்கே செல்கின்றது பார்த்தீர்களா?

இது பற்றி இலங்கை அதிகாரி ஒருவரிடம் கேட்டால் இப்படி சொன்னார்

“எங்கள் நாட்டில் ஏராளமானோர் இறந்து பலர் காயமுற்று இருப்பது வேதனை , இந்த தருணத்திலும் தமிழக மக்களுக்கு நாங்கள் ஆறுதல் கூறுகின்றோம்

அடிமுட்டாள்கள் எல்லாம் தன்னை தலைவன் என சொல்லும் அளவு மகா பரிதாப நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு மிகுந்த அனுதாபங்கள்”