நீதிநெறிவிளக்கம் : 92
“நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே – கஞ்சுகம்
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது”
கஞ்சுகம் என்றால் ஆடை அல்லது மேல்துணி
உள்ளத்தால் துறவு பூணாமல் எல்லா ஆசைகளையும் மனதில் வைத்து கொண்டு துறவிக்குரிய ஆடையினை அணிந்தால் அவர் துறவியாகிவிட மாட்டார், அந்த கஞ்சுகம் எனும் ஆடை அவர் உடலை காக்குமே தவிர அவரின் உணர்வை காக்காது, அந்த உணர்வினை அவரால் துறக்கமுடியாதபொழுது அவர் ஞானம் பெற்று முக்தி அடைய வழியே இல்லை
உள்ளத்தால் துறவினைமேற்கொள்ளாமல் உடலால் துறவிக்குரிய ஆடையினை அணிந்தால் எந்த பலனுமில்லை எனபது பாடலின் பொருள்