நீதிநெறி விளக்கம் : 94

நீதிநெறி விளக்கம் : 94

“மறைவழிப் பட்ட பழமொழி தெய்வம்
பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப்
புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும்
சென்றுதைக்குஞ் சேயார் முகத்து”

அழுகிய மாமிசத்தை மூடி வைத்தாலும் அதலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைக்க முடியாது, அப்படியே ஒருவன் எங்கோ மறைவாக பேசிய பழிகளும் வஞ்சக மொழிகளும் தெய்வம் கண்ணை திறக்கும்பொழுது எல்லா இடத்துக்கும் பரவிவிடும் என்பது பொருள்.

யாரும் கண்காணிக்காத இடத்தில் இன்னொருவரை பற்றி பழிபேசுகின்றோம் என பேச வேண்டாம், தெய்வம் அவனை தண்டிக்கும் நேரத்தில் மறைவாக அவன் பேசிய பழிசொல்லெல்லாம் எல்லா இடத்திலும் , பழிசொற்களை மறைக்கமுடியாது என்கின்றார் குமரகுருபரர்.