நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்
இந்த நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்
அந்நாட்டு அமைவிடம் தமிழக அரசியல் போல அடிக்கடி சீற்றம் நிகழும் இடம்தான். பூகம்பமும் சுனாமியும் புயலும் அவர்களின் அன்றாட வாடிக்கை
மலேசியாவுக்கு மழை என்பது போல புயலும் அலையும் அவர்களின் வாழ்வியலில் ஒன்று
அப்படிபட்ட ஜப்பானியர் ஒரு சூறாவளியியால் நிலை குலைந்து போனார்கள் என்றால் அதன் வலிமை எப்படி இருந்திருக்கும்?
கிட்டதட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள், 70பேர் பலி என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாயிற்று
ஏராளமானவர்களை காணவில்லை என்பது கலங்கடிக்கும் செய்தி
வீடு மற்றும் வாகனம் உட்பட சேதாரம் பில்லியன் டாலர்களாக இருக்கலாம்
கிழக்காசியாவின் மிகபெரும் பேரழிவாக கருதபடும் இந்த சூறாவளியின் அழிவு அலற வைக்கின்றது, உலக நாடுகள் ஓடி ஓடி உதவுகின்றன
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இப்படித்தான் இருக்கும் என்கின்றார்கள், சென்னைவாசிகள் முன்ன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது

முன்னெச்செரிக்கை என்பது ஊரை காலி செய்தல் என்பதல்ல குறைந்த பட்சம் ரப்பர் படகுகளையாவது வாங்கி வைத்திருப்பது..