நெல்லை செழிக்கட்டும் அவரும் வரலாற்றில் நிற்கட்டும்
பாராளுமன்றத்தில் பலர் கன்னிபேச்சு என தொடங்கி பேசிகொண்டிருக்கின்றார்கள், நெல்லைக்காரன் என்ற முறையில் அந்த பகுதியின் எம்பி ஞானதிரவியத்தின் பேச்சிக்கு எதிர்பார்ப்பு இருந்தது
தேசத்தின் சபையில் நெல்லை மக்களின் குரலாக அறியபடுபவர் என்ன பேசினார் என கவனித்தோம்
மனிதர் அணுகழிவு மையம் உட்பட இதர சிக்கல் பற்றி பேசவில்லை. பேசியும் ஒன்றும் ஆகாது என்பது அவருக்கும் தெரியும் எல்லோருகும் தெரியும்
இதனால் சில குறிப்பிட்ட சிக்கல்களை தொட்டு பேசினார், தாமிரபரணி கரையினை குஜராத் நதிகளை போல பலபடுத்தவேண்டும் என அவசியமான விஷயத்தை சொன்னார்
அது நிச்சயம் கவனிக்க வேண்டியது, நெல்லையின் பெரும் அடையாளமான தாமிரபரணியினை காக்க அவர் சிந்தித்ததும் அதற்கான திட்டங்களை சொன்னதும் வரவேற்கதக்கது
திமுக என்பது என்றுமே மக்களின் சிக்கலை உரக்க சொல்லும் கட்சி என்பதும் நிரூபணமாயிற்று
(அந்த திட்டத்துக்கு 600 கோடி செலவழியும் என்பது போல் பேசினார்
வெறும் 600 கோடிதான், செய்ய வேண்டுமென்றால் ஞானதிரவியமே சொந்த செலவில் செய்யலாம், செய்தால் சுலோச்சனா முதலியார் போல் வரலாற்றில் நிற்பார்
ஆனால் பின் அரசு என ஒன்று எதற்கு இருக்கின்றது? இவர் எம்பி என எதற்கு இருக்கின்றார், அரசு நிதியினை பெற்று நெல்லைக்கு தருவதற்குத்தானே சென்றிருக்கின்றார்)
தாமிரபரணியினை காக்க தன் கன்னிபேச்சிலே அவர் பேசியிருப்பதற்கு நெல்லை மக்கள் சார்பாக நன்றி
அப்படியே நெல்லைக்கு தெற்கே வறண்டு கிடக்கும் வள்ளியூர் ராதாபுரம் பகுதிக்கு மேற்கு நோக்கி பாயும் நதிகளை திருப்பும் பெருந்திட்டம் பற்றி பேசுவா என தென் நெல்லையும் எதிர்பார்க்கின்றது.
ஒரு சொட்டு நீருக்கு ஆயிரம் அடிக்கு கீழ் தோண்டிபார்க்கும் அந்த வலி அவரும் அறிந்தது, அவரையன்றி யாரும் அதிகம் அறிந்திருக்கவும் முடியாது
இன்னும் பல திட்டங்கள் அங்கு அவசியம் தேவை , மிக பின் தங்கிய பகுதி அது. பல வசதிகள் அவசியம் தேவை ஆனால் ரயில்கள் கூட சரியாக நிற்காது
அதற்கெல்லாம் யார் பேசுவார்கள்? தென் நெல்லையின் வறட்சியினை போக்கவும் இன்னும் பல நடவடிக்கைகளை கோரவும் யார் இருக்கின்றார்கள்
அவர்தான் இருக்கின்றார், அதற்குத்தான் நெல்லை தொகுதி அவரை அனுப்பியும் வைத்திருகின்றது
எம்பி ஞானதிரவியம் இன்னும் நிறைய பேசட்டும், பெரும் நல திட்டங்களை இங்கு கொண்டுவரட்டும்
நெல்லை செழிக்கட்டும் அவரும் வரலாற்றில் நிற்கட்டும்
