நெல்லை திமுகவுக்கு இனி சவால்…

நெல்லையில் தினகரன் அணி வேட்பாளர் மாற்றபட்டிருகின்றார், அவரை ஓசூருக்கு மாற்றிவிட்டார்களாம்

வெல்லத்தானே சோதனை, தோற்பதற்கு எந்த தொகுதி வேண்டியிருக்கின்றது என அந்த வேட்பாளரும் ஓசூருக்கு பெட்டி கட்டி கிளம்பிவிட்டார்

அடித்த போஸ்டரும், பேனரும்தான் வீண் என்கின்றார்கள்

இப்பொழுது புதிய வேட்பாளர் யார் தெரியுமா? மைக்கேல் ராயப்பன்

அன்னார் பல விஷயங்களில் வெளிதெரிந்தவர், முதலில் விஜயகாந்த் கட்சியில் இருந்து வென்ற அவர் பின்பு அதிமுகவுக்கு மாறினார், விஜயகாந்தின் முதல் எதிரி இவர்தான்

பின்னர் அன்பானவன் அடங்காதவன் படம் எடுத்து சிம்புவுடன் மல்லுகட்டியவர்

இப்பொழுது மறுபடியும் தேர்தலில் 
மல்லுகட்ட வருகின்றார்

இவர் வருவதனால் யாருக்கு லாபம் என்றால் சாட்சாத் மனோஜ் பாண்டியனுக்கு, ஆம் நிச்சயமாக அவருக்கே

ஞானதிரவியம் கோஷ்டிக்கு பெரும் சவாலாக நிறுத்தபடுகின்றார் இந்த முன்னாள் எம்.எல்.ஏ

தென் நெல்லை மாவட்ட நாடார் மற்றும் கிறிஸ்தவ வாக்குள பிரியும் பொழுது அது மனோஜ் பாண்டியனுக்கு கூடுதல் பலமாக அமையும்

நெல்லை திமுகவுக்கு இனி சவால்…