நெல்லை மறுபடியும் மிரட்ட தொடங்கிவிட்டது

கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த நெல்லை மறுபடியும் மிரட்ட தொடங்கிவிட்டது.

ஒரு மாதிரியான பூமி அது, நடந்த ரத்த களறிகள் ஏராளம். இப்பொழுதுதான் கொஞ்சம் அமைதி

அதனை அசைத்துபார்க்கும் விதமாக நெல்லையின் முன்னாள் மேயர் உமா பரமேஸ்வரி உட்பட 3 பேர் கொல்லபட்டிருக்கின்றனர்

உமா பரமேஸ்வரி நெல்லையின் முதல் பெண் மேயராக 1996ல் பதவி ஏற்றவர்

அவருக்கு சொந்த தகாறோ இல்லை வேறு தகறாரோ என்னமோ நெருக்காமனவர்களை எல்லாம் இழந்தே வந்தார்

அவர் சகோதரர் கொல்லபட்டார், மகன் விபத்தில் கொல்லபட்டான்

இதன் பின் விலகியே இருந்தார் உமா மகேஸ்வரி, அவரும் நேற்றுகொல்லபட்டிருக்கின்றார்

நகைகள் களவு போயிருக்கின்றன, இது நகைக்காக நடந்த கொலை என்றாலும் நம்ப யாரும் தயாராக இல்லை.

உமா மகேஸ்வரியின் கணவரும், வேலைக்காரரும் கொல்லபட்டிருக்கின்றனர்.

ஏதோ தொடர்ச்சியான மோதலில் நடந்த கொலை இது, சாட்சி ஏதும் இருக்க கூடாது என இருந்த 3 பேரையும் மொத்தமாக கொன்றிருக்கின்றார்கள் என்பது சம்பவ இடத்தை நோக்கினாலே தெரிகின்றது

நெல்லையில் கடும் இறுக்கமும் பாதுகாப்பும் பலபடுத்தபட்டிருகின்றன‌

உமா மகேஸ்வரி திமுகவின் மேயராக இருந்ததால் முக ஸ்டாலின் நேரடியாக அவர்படுகொலைக்கு நியாயம் கேட்டு குரலெழுப்பியிருப்பது குறிப்பிடதக்கது.

குற்றவாளிகளை காவல்துறை விரைவில் பிடித்துவிடும் , அதற்கான விசாரணை முழு வேகமாக நடக்கின்றது