நேற்று தமிழக ஐகோர்ட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை சொல்லியுள்ளது, இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பான அவ்வழக்கில்
நேற்று தமிழக ஐகோர்ட் முக்கியமான தீர்ப்பு ஒன்றை சொல்லியுள்ளது, இலங்கை தமிழர் குடியுரிமை தொடர்பான அவ்வழக்கில் நீண்ட நாளாக தூங்கிய அல்லது மறைக்கபட்ட உண்மை வெளிவந்திருக்கின்றது
இதனை நாம் அடிக்கடி முன்பே சுட்டிகாட்டியும் இருந்தோம்
இலங்கையில் இருந்து அகதியாக வந்த தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாய் உண்டு, அவ்வகையில் ஒரு வழக்கு தமிழக உச்சநீதிமன்றத்துக்கு வந்தது
அதனை தொடுத்தவர் இலங்கை தமிழக தம்பதிகளுக்கு இந்திய தமிழகம் திருச்சியில் பிறந்த ஒரு வாரிசு, அவர் தனக்கு குடியுரிமை கேட்டு வழக்கு தொடுத்தார்
இந்த வழக்கில்தான் நீதிபதி சுவாமிநாதன் சரியான சட்டவிளக்கத்தை கொடுத்திருக்கின்றார்
அதாவது இந்தியா பாகிஸ்தான் பிரிக்கபட்டபோது எழுதபட்ட சட்டத்தையும், சமீபத்தில் இந்திய குடியுரிமை சட்டம் திருத்தபட்டதையும் சுட்டிகாட்டி தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்
அச்சட்டபடி இந்தியாவின் அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கலாம், அண்டை நாடுகளிலும் சிறுபான்மையான இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களுக்கு இச்சலுகை உண்டு
அவ்வரிசையில் இலங்கையில் இருந்து வந்த இந்துக்கள் இவர்கள் என சுட்டிகாட்டுகின்றார் நீதிபதி , அதனால் இவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்கின்றார்
இது சரியான தீர்ப்பு
இலங்கையில் நடந்தது உண்மையில் இந்து பவுத்தர் சச்சரவு, அது பின் ஆயுத போராட்டமாக மாறியபொழுது சிங்கள தரப்பை பவுத்த பேரினவாதம் என சொன்ன திராவிட மிஷனரி கும்பல் கடைசி வரை தமிழனை இந்து தமிழன் என சொல்லாமல் ஈழதமிழன் என்பதோடு நிறுத்திற்று
அப்பக்கம் சிங்கனவனுக்கு புத்தமதம் உண்டென்றால் இங்கு தமிழனுக்கும் ஒரு மதம் இருக்கவேண்டும் அல்லவா? அதை சொல்லாமல் அவனை மொழிஅடையாளமாக்கி தமிழன் என்றது
இந்த “தமிழன்” என்பதைத்தான் திராவிட கும்பல்களும் பிடித்து ஆடி, அந்த தமிழன் இந்து என்பதையே மறைத்தார்கள்
ஒருவேளை அவர்கள் இந்துக்கள் என அழைக்கபட்டிருந்தால், அந்த போராட்டம் இந்துஈழம் என போராடியிருந்தால் அகில இந்திய இந்துக்கள் ஆதரவாவது கிடைத்திருக்கும் , உலக இந்துக்கள் அனுதாபம் கிடைத்திருக்கும்
இந்து தமிழ் ஈழமும் கிடைத்திருக்கும்
ஆனால் தமிழ், தமிழர் என திராவிடமும் மிஷனரி கும்பலும் அந்த போராட்டத்தையே மடைமாற்றி ஒழித்தனர்
இப்பொழுது இந்தியநீதிமன்றம் அவர்கள் இந்துக்கள் எனும் உண்மையான அடையாளத்தை கொடுக்கின்றது அதையே காரணம்காட்டி அவர்க்ள் குடியுரிமைக்கும் உத்தரவிடுகின்றது
இந்த தீர்ப்பு கொண்டாடபடவேண்டிய தீர்ப்பு
ஆனால் ஈழமக்களுக்கு குடியுரிமைவேண்டும் என கேட்ட வை.கோ, சீமான், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் கனத்த அமைதியில் இருப்பதுதான் உணரவேண்டிய சதி
ஆம், இந்த அமைதி அவர்களுக்கு பெரும் வருத்தம்
காலமெல்லாம் தமிழ், தமிழன் என அரசியல் செய்தோருக்கு, ஈழதமிழருக்கு குடியுரிமை என அரசியல் செய்தோருக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கின்றது நீதிமன்றம்
இங்கு சட்டபடி இந்துக்களுக்கே குடியுரிமை உண்டு, அவர்கள் இந்துக்கள் என்பதால் கொடுக்கலாம் என அது சொல்லி இந்த “தமிழ்” “தமிழர்” என்பதெல்லாம் வெற்று கோஷம், வறட்டு சத்தம் என்பதை சொல்லியிருக்கின்றது
இனியாவது ஈழ இந்து மக்களும், தமிழக இந்துமக்களும் இந்து என்பதே ஒற்றுமையின் வழி, இந்து என்பதே இங்கு இணைந்துவாழும் வழி என்பதை உணர்ந்து, இந்த திராவிட தமிழ் என்பதெல்லாம் மிஷனரி சதி என்பதை உணர்ந்து திருந்தட்டும்
ஈழ இந்துக்கள் இனி இந்துவாக உணர்ந்து வாழட்டும், அவர்களுக்கு அங்கும் இந்துக்களாய் வாழ எல்லா வாய்ப்பும் உரிமையும் பெருகட்டும்
ஈழதமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோர்ட் உத்தரவிட்டும், இந்து அடிப்படையில் அவர்களுக்கு குடியுரிமை என்றால் வாயே திறக்கமாட்டோம் என பெவிக்கால் போட்டு ஒட்டி அமர்ந்திருக்கும் இந்த ஈழ பொனந்தின்னி வியாபாரிகளின் இந்து துவேஷத்தை இனியாவது ஒவ்வொரு இந்துவும் புரிந்துகொள்ளல் வேண்டும்.
அப்படியே அண்டை நாட்டு சிறுபான்மை இந்துக்கள் இங்கு குடியேற முன்பு இருந்த சட்டத்தை இன்னும் வலுபடுத்தி சீர்படுத்தியது மோடி அரசு எனும் நன்றி உணர்வையும் மனதில் வைக்க வேண்டும்