நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா : செய்தி
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா : செய்தி
அதாவது அணுசக்தி ஒழிப்பு தொடர்பான விவகாரங்களில் இந்தியா அக்கறைகாட்டவில்லை என அணுவுலை எதிர்ப்பாளர்கள் பொங்குகின்றார்கள், அப்படி சென்றால் நம்மை ஏதும் ஒப்பந்ததிற்கு இழுத்துவிடுவார்கள் என இந்தியா யோசிக்கின்றது
சரி இது வேறு விஷயம்
இப்போதைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை இந்தியா ஏன் புறக்கணித்தது என செய்தி அதிமுகவினரை எட்டினால் என்னாகும்?
“எங்கள் இதய தெய்வம் அம்மாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காததை கண்டித்து அதை புறக்கணித்த மோடி வாழ்க, எங்கள் கோரிக்கையினை புறக்கணித்த நோபல் கமிட்டி
ஒழிக
ஜெயாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது அநியாயம் என தெரிந்துகொண்ட இந்திய அரசுக்கு நன்றி..” என கிளம்பமாட்டார்களா?
செல்லூர் ராஜூ எல்லாம் சும்மா விடுவார்களா?
அதனால் இச்செய்தி அதிமுகவினரை எட்டாமல் இருப்பது தமிழகத்திற்கு நல்லது