நோபல் பரிசு வென்றால் 100 கோடி பரிசு: சந்திரபாபு நாயுடு

https://youtu.be/cGuulcdIc-8

ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் 100 கோடி பரிசு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

என்ன ஆயிற்று இவருக்கு?

ஜெயலலிதாவிற்கு நோபல் பரிசு வேண்டும் என அடிமைகள் கண்ணை கசக்கும்பொழுது இப்படி சந்திரபாபு அறிவித்தால் என்ன அர்த்தம்?

அது மிக பெரும் உயர்ந்த விருது, கிடைத்தற்கரிய விருது என அர்த்தம்.

நல்ல வேளையாக நோபல் கமிட்டி இந்தியாவில் இல்லை

இருந்திருந்தால் என்னாகும்?

நோபல் பரிசு என்பது இவ்வளவு பணம் கொண்டதல்ல, இதனை ஒப்பிடும்பொழுது சொற்பமே.

அதனால் தமிழக அரசினையும் அப்படி அறிவிக்க வைப்பார்கள். தமிழர் நோபல் வென்றால் 200 கோடி

அதன் பின் விளையாட்டு தொடங்கும்

இதோபார் உன் நோபலுக்கு நாங்கள் பொறுப்பு, ஆனால் முக்கால் பங்கினை எங்களுக்கு கொடுத்துவிட வேண்டும், எங்களுக்கும் செலவு இருக்கின்றது.

பின் பரிசு வாங்குபனிடமிருந்து ஒரு கமிஷன், இந்திய நோபல் கமிட்டிக்கு ஒரு பங்கு , கட்சி நிதி ஒரு பங்கு, குழு நிதி ஒரு பங்கு என பங்கு போட்டு விடுவார்கள்.

அதன் பின் இந்திய நோபல் ஊழல் என ஒரு சர்ச்சை வரும், அதற்கொரு கமிஷன் ஆனால் விசாரணை முடிவு வரவே வராது.

ஆனாலும் சந்திரபாபு நாயுடு இப்படி அதிமுகவினரை கலாய்க்க கூடாது, அப்படி என்ன கோபமோ தெரியவில்லை