பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

அந்த மனிதர் முரண்பாடுகளின் உச்சமாகவும் இன்னொரு பக்கம் தெய்வமாகவும் கொண்டாடபடும் ஒரு அதிசய பிறப்பு, இன்றுவரை அவரை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம் பல தரவுகளின் உண்மை தன்மை அடிப்படையிலே அவரை புரிந்து கொள்ளமுடியும்

ஆனால் புரிந்து கொள்ள‌ சிரமமே இல்லா விஷயம் அவரின் நாட்டுபற்றும், ஒரு சித்தர் வகையான‌ முருக பக்தர் என்பதுமாகும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

அந்த மிக சிறிய கிராமத்தில் பிறந்த அவர் இளமையிலே தாயினை இழந்தார், ஒரு இஸ்லாமிய தாயே அவரை வளர்த்தார், அந்நன்றி அச்சமுதாயத்தின் மேல் எந்நாளும் தேவருக்கு இருந்தது

அதிகம் படித்ததில்லை தேவர், பத்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தார் ஆனாலு அற்புதமான பிறவி ஞானமும் ஆங்கில புலமையும் அவருக்கு இயல்பாய் வந்தது அதைவிட அழகானது அவரின் தமிழ்

பெரும் நிலக்கிழாரான அவருக்கு ஆன்மீகமும் நாட்டுபற்றும் இருகண்களாயின , மிக சிறுவயதிலே பொதுவாழ்க்கைக்கு வந்தார். அந்த உணர்ச்சிகரமான பேச்சு அவருக்கு மிகபெரும் பலம், முதல் பேச்சே சாயல்குடியில் விவேகானந்தரை பற்றி 3 மணிநேரம் பேசிய பேச்சாய் இருந்தது, துண்டு சீட்டெல்லாம் இல்லை

பட்டுகோட்டை அழகிரி, வைகோ இன்னபிற திராவிட குஞ்சுகளுக்கெல்லாம் பேச்சுகலை எப்படி இருக்க்கவேண்டும் என சொல்லிகொடுத்ததே அவர்தான். ஆன்மீகம் அரசியலும் உலக அரசியலும் இயல்பாய் வந்து அவர் நாவில் முழங்கின‌

மிக முக்கியமானது முருகபெருமானின் பாடல்களும் சங்க பாடல்களும்

அவருக்கு 25 வயதாகும் பொழுது அவரின் பொதுவாழ்வு ஆரம்பிக்கின்றது , அதுவரை டி.எம் நாயர் போன்றோர் தனியாக போராடிகொண்டிருந்த குற்றபரம்பரை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை மிக தீவிரமாக முன்னெடுக்கின்றார் தேவர். அச்சட்டம் மகா கொடுமையானது, இந்தியா முழுக்க இருந்தெனினும் மதுரை பக்கம் அதிகமாய் இருந்தது

அச்சட்டம் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம், அச்சட்டத்தின் விளைவுகளில் ஒன்று குற்றபரம்பரை என சொல்லபடும் குடும்பம் எப்பொழுதும் காவலர் கண்முன்னே இருத்தல் வேண்டும், ஒருவகையான அடிமை நிலை, வேலை வெட்டி எல்லாம் இரண்டாம் பட்சம்

அச்சட்டம் அன்று நீக்கபடவில்லை எனினும் தேவர் கொடுத்த அழுத்தமே பின்னாளைய வெற்றிக்கு காரணம்

அதன் பின் காங்கிரஸில் இணைந்தார் தேவர், நாட்டுபற்றும் ஆற்றலும் கொண்டோர் காங்கிரஸில் இணைந்த காலமது. நீதிகட்சி போன்றவை ஒருவித பிரிவினை கோஷ்டி என்பதால் தேவர் அதில் இணையவில்லை, குற்றபரம்பரை சட்டம் நீக்கபட்டதில் நீதிகட்சி முரண்பட்டது என்பது இன்னொரு காரணம்

பிரிவினைவாத பிரிவினை கட்சிக்கும் தேசியவாதியான தேவருக்கும் பொருந்தவில்லை அதுதான் பின்னாளைய சிக்கலுக்கு காரணம்

இந்நிலையில் 1937 தேர்தல் வந்தது , அதில் வெள்ளை அரசாங்கம் நீதிகட்சி பின்னால் இருந்தது. காங்கிரஸ் தேவரை கையில் எடுத்தது. நீதிகட்சி ராமநாதபுர அரசர் சேதுபதியினையே களத்திற்கு கொண்டுவந்தது, ஆயினும் மன்னரை தோற்கடித்தார் தேவர்

ஆங்கில அரசும் நீதிகட்சியும் அரண்டு போன தருணமது, ராஜாஜி முதல்வரானார் அவரின் சிஷ்ய கோடிகளாக காமராஜரும் தேவரும் இருந்தார்கள், கோஷ்டி பூசல் என்பது காங்கிரசின் சாபம் அல்லவா? அதனால் காமராஜர் சத்யமூர்த்தி பக்கம் சென்றார் தேவர் ராஜாஜி பக்கமே இருந்தார்

இந்நிலையில் பெரியாரும் நீதிகட்சியும் செய்யா ஒரு காரியத்தை சமூக சீர்திருத்ததை ஒரு பிராமணர் முன்னெடுத்தார் அவர் பெயர் வைத்தியநாத அய்யர்

ஆம் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோரும் நுழையவேண்டும் என போராடியவர் அவர்தான், ஆனால் அய்யர் அல்லவா பெரும் மக்கள் சக்தி இல்லை, இந்த இடத்தில் தன் படையோடு வந்த தேவர் அய்யருக்கு பலமாக நின்று அம்மக்களை உள்ளே செல்ல அனுமதித்தார், பெரும் விஷயம் அது. தாழ்த்தபட்டோருக்கான உரிமையினை அவரே பெற்று கொடுத்தார்

தொழிலாளர்களுக்கான தமிழக தலைவராக விளங்கியவரும் அவரே, வ.உ.சிக்கு பின் அந்த இடம் அவருக்குத்தான் வந்தது

இந்த தலித் புரட்சியாளர்கள், திராவிட வீரர்கள் யாரும் தொழிலாளர் தலைவனாக அக்காலத்தில் இருந்ததே இல்லை. காரணம் அவர்கள் ஏரியாவே மத பிரிவினை தேசபிரிவினை என்றேதான் இருந்தது

பசுமலை ஆலை தொழிலாளர் கூட்டமைப்பு முதல் டிவிஎஸ் தொழிலாளர் கூட்டமைப்பு வரை தேவரே நடத்தி அவர்களுக்கான உரிமையினை பெற்றும் கொடுத்தார்

காங்கிரஸில் பெரும் இளம்தலைவராக அவர் வளர்ந்தபொழுதுதான் திரிபுரா மாநாட்டில் நேதாஜிக்கும் காந்திக்கும் முட்டிகொண்டது. நேதாஜி காங்கிரஸில் இருந்து விரட்டபட்டார். முழு தேசியவாதியான நேதாஜியுடன் தயக்கமே இல்லாமல் வெளிவந்தார் தேவர்

நேதாஜியினை மதுரைக்கு அழைத்து வந்து பெரும் மாநாடு நடத்தியதெல்லாம் தேவரின் முத்திரைகளில் ஒன்று

நேதாஜிக்கு தமிழகம் முழு பலமாய் இருக்க தேவர் முதல் காரணம்

அதன் பின் உலக யுத்தம் தொடங்கியது, நிலமையினை கண்காணித்த வெள்ளை அரசு காங்கிரஸ் ஒத்துழைப்புடன் தேவரை சிறையில் தள்ளியது, உலகமும் இந்தியாவும் மொத்தமாக குழம்பிய காலத்தில் நேதாஜி பர்மாவில் இருந்து போராடிய காலத்தில் தேவர் சிறையிடபட்டார், காங்கிரஸ் அதை கண்டிக்க கூட இல்லை.

1946ல் விடுதலையானார் தேவர், அப்பொழுது நேதாஜி இல்லை மாறாக அப்பொழுது நடந்த சென்னை மாகாண தேர்தலில் அமோக வெற்றிபெற்றார், அதன் பின்பே குற்றபரம்பரை சட்டம் முழுவதுமாக ஒழிந்தது

1949ல் தீவிர அரசியலுக்கு வந்தார் தேவர், தனி மனிதனாய் காங்கிரஸை அன்றே எதிர்த்து கடும் தேசபற்று பேசினார், அவருக்கு பின் 1979ல் மொரார்ஜி பேசினார், அதன் பின் பாஜகதான் பேசிற்று

சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் காங்கிரஸின் தேசவிரோத செயல்கள் சிலவற்றை துணிச்சலாக பேசியவர் தேவர், அவர் வழி வந்தவர்தான் மோடி

காங்கிரஸையும் அதே நேரம் அழிச்சாட்டிய திராவிட கும்பலையும் ஒருசேர கண்டித்தவர் தேவர். அதில் நாட்டுபற்றும் மத அபிமானமும் கலந்திருந்தது

தேவரின் சொற்படி கேட்டிருந்தால் காஷ்மீர் சிக்கல் இந்த அளவு வந்திருக்காது, சீனாவுடனான நிலை இந்த அளவு மோசமாயிராது, நாட்டுபற்றில் அவர் சொன்ன கருத்துக்கள் எதுவும் காங்கிரஸின் காதுகளுக்கு எட்டவில்லை

தேவரின் பலம் தேர்தல் தோறும் தெரிந்தது, ராமநாதபுரம் முதல் தேனிவரையிலான பகுதி அவரின் கோட்டையாக திகழ்ந்தது, திராவிட கழகமோ காங்கிரஸொ அப்பக்கம் வரமுடியவில்லை, எனினும் வேறு பகுதியில் குறிப்பாக காவேரி கரைகளில் வட தமிழ்நாட்டில் திராவிட கழகத்தின் வளர்ச்சி காங்கிரஸின் கோட்டையினை லேசாக அசைத்தது, தலித்துகளை வளர்க்கும் நிலைக்கு காங்கிரஸ் ரகசியமாக இறங்கியது

இந்நிலையில்தான் முதுகுளத்தூர் கலவரம் நிகழ்ந்தது, இம்மானுவேல் சேகரன் கொலை எல்லாம் நிகழ்ந்த கொடும் காலங்கள் அவை, தேவரை முதல் குற்றவாளியாக்கினார்கள்

மதுரை ஆலயத்தில் தலித் நுழைய போராடிய, தன் நிலங்களை எல்லாம் தலித்துகளுக்கு பிரித்து கொடுத்த, தலிதுக்கள் தொழிலாளராய் இருந்த தொழிற்சாலைகளிலெல்லாம் அவர்களுக்க் உரிமை பெற்றுகொடுத்த தேவர் அந்த கொலையில் குற்றம்சாட்டபட்டதில் அரசியலும் இருந்தது

காங்கிரஸின் எதிரி என்றும் இன்னும் பல காரணங்களுக்காக அந்த கைது நடந்தது, அவர் தீவிர இந்துமதவாதி என்பதும் கூடுதல் காரணம். ஆனால் ஆதாரமே இல்லை என விடுதலை செய்யபட்டார் தேவர்

அதன் பின் காங்கிரஸ் ஆட்சியினை ஒழிக்க காமராஜரின் எதிர்கள் எல்லாம் ஒன்று கூடினர், சூத்ரதாரியாக ராஜாஜி இருந்தார், திமுக வந்தது , அப்பொழுது ராஜாஜி ஒரு பார்ப்பான் என்பது அவர்களுக்கு மறந்தே விட்டது. தேவரும் ராஜாஜிக்காக ஆதரவு தெரிவித்தார், திமுக மைனாரிட்டியாக இருக்கும் தான் ஆட்டிவைக்கலாம் என கனவுகண்டார் ராஜாஜி, அந்த கனவில் மண் அள்ளிபோட்டார் அண்ணாவும் ராமசந்திரனும்

ஆனால் தேவர் அவர்போக்கில் தனிராஜாவாக திகழ்ந்தார், 1963ல் இதே அக்டோபர் 30ல் அவரின் அவதார தினத்திலே மறைந்தார்

தேவரின் வாழ்வினை கவனித்தால் பல நல்ல விஷயமும் தெரியும்

அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி அதைவிட அற்புதமான முருக பக்தர். முதன் முதலில் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்கிய தமிழன் அவர். திராவிட இம்சைகளின் முழக்கமெல்லாம் அந்த தேசியவாதி முன் நிற்கமுடியாது

அவரின் நாட்டுபற்று வணங்கதக்கது அஹிம்சை மற்றும் ஆயுதவழி என இரண்டுக்குமே முன்னால் நின்ற பெருமகன் அவர்

மத பாகுபாடு அவர் கண்டதில்லை, இஸ்லாமிய மக்களுடன் வளர்ந்ததால் கடைசிவரை அந்த நல்லுறவு நீடித்தது

சாதி அபிமானம் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை, இருந்திருந்தால் தாழ்த்தபட்டோர் ஆலய நுழைவு, தொழிலாளர் சிக்கல் போராட்டம் செய்திருக்கமாட்டார் மற்றும் தன் சொந்த நிலத்தை எல்லாம் கொடுத்திருக்க மாட்டார்.

அவரின் வாழ்வு சொல்வது ஒன்றே ஒன்றுதான்

அவரின் அர்பணிப்பான நாட்டுபற்றுக்கும் மகா சுத்தமான இந்து மத அபிமானத்துக்குமே அவர் குறிவைக்கபட்டார்

காங்கிரஸின் சில மர்ம நடவடிக்கைகளை கேள்வி கேட்டதால் காங்கிரஸும், பிரிவினை மற்றும் நாத்திக இம்சைகளை கண்டித்ததாலும் ஒரு மாதிரி சர்ச்சை பிம்பம் அவர்மேல் சூட்டபட்டது, வாக்கு அரசியல்,பிரிவினை அரசியல் என ஏகபட்ட சூழ்ச்சி அதில் உண்டு

ஆனால் முருகபெருமான் தேவரோடே இருந்தார்

ஆம், தேவரின் வீழ்ச்சிக்கு பின் காங்கிரஸும் வீழ ஆரம்பித்தபொழுதுதான் தன் அஸ்திவாரத்தையே இழந்ததை காங்கிரஸ் உணர்ந்தது.

பிரிவினைவாத திமுக தேவரை மிக தந்திரமாக பயன்படுத்திவிடு தூர எறிவதை பார்த்து முருகபெருமான் சிரித்துகொண்டிருந்தது பலருக்கு அன்று தெரியவில்லை பின்பு தெரிந்தது

ஆம் இன்னொரு முருகபெருமானின் பக்தனான ராமசந்திரன் அந்த திண்டுக்கல் இடைதேர்தலில் மாய தேவர் என்பவரை முன்னிறுத்தி மாயவேலைகள் செய்து வென்றபொழுது தேவரின் மகத்துவம் புரிந்தது

ஆளாளுக்கு தேவரின் கல்லறை நோக்கி ஓடினார்கள், மண்டியிட்டார்கள்

ஆம் தேவரின் தேசபற்றும் மதஅபிமானமும் மகா உண்மையாய் இருந்திருக்கின்றது, இன்றும் தமிழக அரசியலில் முக்கிய இடம் வகிப்பது அவர் உருவாக்கி வைத்த அஸ்திவாரமே

இது பொய்யென சொல்வீராயின் திமுக தலமைகள் அங்கு ஓடுவது ஏன்?

காலம் கடந்து உணரபட்டிருக்கின்றார் அவர், இன்றும் பாருங்கள் அவரின் அடிப்பொடிகள் தேசவிரோதம் பேசாது, மத வெறுப்பு பேசாது, இந்துமதத்தை கண் என காத்து நிற்கும்

ஆனால் அவர் வாழ்நாளெல்லாம் எதிர்த்த காங்கிரஸ், நீதிகட்சி தொடங்கி வைத்த திராவிட மற்றும் இதர போராட்டவாதகுழுக்கள் பேசுவெதெல்லாம் பிரிவினைவாதமும் மத துவேஷமும்

ஆக அன்றே மிக சரியான பாதை கண்டிருக்கின்றார் பசும்பொன் சிங்கம்

வெளுத்துவிட்ட காங்கிரஸ் சாயம், வாக்குக்காக பழனிக்கும் காவடி தூக்கும் திராவிட இம்சைகள், பிரிவினையும் இந்துமத வெறுப்பும் கக்கும் போராளிகள் என இன்றைய காட்சிகளை காணுங்கள் தேவரின் தனித்துவம் புரியும்

இன்று காணும் பாஜகவினை அன்றே கனவு கண்ட மனிதன் அவன் என்பது புரியும்

இன்று நிச்சயம் அம்மனிதனே வென்றிருக்கின்றான், நாடும் தமிழகமும் அவன் கண்ட பாதையிலேதான் நடைபோடுகின்றன, அவரின் மாபெரும் வெற்றி இது

அதை எங்கும் அழுத்தமாக சொல்லலாம், சந்தேகமில்லை. அம்மகான் கண்ட பாரதம் இதுதான்.

இன்று அவர் இருந்திருந்தால் அவரும் அவர்கள் பாஷையில் சந்தேகமில்லாமல் சங்கியே, அது அவருக்கு பெருமை, சங்கிகளுக்கும் பெருமை..

அம்மனிதன் கடைசிவரை உண்மையான முருக பெருமான் அடியானாய் வாழ்ந்தான் இறந்தான், வாக்குக்காகவும் பதவிக்காகவும் தன்நிலை தாழ்த்திகொண்டவன் அல்ல. அவன் தூய இந்துவாய் வாழ்ந்தான், அதுதான் அவனை வழிநடத்தியது, எல்லா சிக்கலில் இருந்தும் காத்தது

அவரை சரித்தால் இங்கு இந்துமதம் சரியும், சாதிய சிக்கல் குழப்பம் வரும் என பல கணக்குகளில் திட்டமிட்டுத்தான் கனைகளை பாய்ச்சினார்கள், ஆனால் ஒரு சக்தி அம்மனிதரை காத்து நின்றது

இன்றும் என்றும் அவனுக்கோர் தனி இடம் கொடுத்திருப்பதும் அந்த முருகபெருமானே..

தூய இந்து என்பதற்காகவும் அப்பழுக்கற்ற நாட்டுபற்றாளன் என்பதற்காகவுமே அம்மனிதன் குறிவைத்து தாக்கபட்டான் விரட்டபட்டான் பல சர்ச்சை பெயர்கள் சூட்டபட்டான் என்பதை தவிர வரலாற்றில் ஒன்றுமில்லை..

அந்த அப்பழுக்கற்ற தேசியவாதிக்கு, மத நல்லிணக்கம் பேணிய மாமனிதனுக்கு, சாதிகளை கடந்து எல்லோரையும் அரவணைத்த நல்லவருக்கு, மகா முக்கியமாக இறுதிவரை பிரம்மச்சாரி கோலம் பூண்டு மகா சன்னியாசனான் முருகபெருமானின் அடியவராய் வாழ்ந்து சென்ற அந்த மகானுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..